கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான நாடுகளில் இரண்டாம் அலையின் வீரியம் குறைந்து சற்றுத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இஸ்ரேலில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
அதேபோல், முழு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கம், ஷாப்பிங் மால் போன்றவையும் திறக்கப்பட்டு பல்வேறு தொழில்களும் வணிகங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஓராண்டில் தற்போதுதான், சீனா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளிகளில் ஆணுறை மற்றும் பிற கருத்தடை சாதனங்களின் விற்பனை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக ரெக்கிட் - `டியூரெக்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள ரெக்கிட் - டியூரெக்ஸ் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் லக்ஷ்மன் நரசிம்மன், `சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சில நாடுகளில் இரண்டாம் அலையின் வேகம் குறைந்து, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் பற்றிய பீதியால் மக்கள் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்து வந்துள்ளனர். இதனால் ஆணுறை மற்றும் பிற கருத்தடை சாதனங்களின் விற்பனை மிகவும் வீழ்ச்சியடைந்தது.
ஆனால், தற்போது அந்நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், மீண்டும் பல மாதங்களுக்கு பிறகு ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்போது விற்பனை மேலும் அதிரிக்க வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பாலியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்பதே பிரதான கருத்தாக உள்ளது. இதன் காரணமாகத்தான் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு, சிறுவயதிலேயே சிறுமிகள் தாய்மை அடைவது போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் 70 லட்சம் பெண்கள் திட்டமிடாத கர்ப்பத்துக்கு உள்ளாகிறார்கள் என்று ஐ.நா-வின் அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியாவில், ஊரடங்கு காலகட்டத்தில் 40% வரை காண்டம் பயன்பாடு குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, இந்திய அரசுடன், `காண்டம் அல்லையன்ஸ்' (Condom Alliance) என்ற முயற்சியை முன்னெடுத்து மக்களுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வையும் கருத்தடை சாதனங்களின் பயன்பாட்டையும் விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஐ.நா-வின் 3-வது குன்றாவள இலக்கான (SDG) `ஆரோக்கியமான வாழ்க்கை'யை நோக்கி இந்தியா பயணிக்க உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
from Latest News https://ift.tt/3nyfw6J
0 Comments