மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைகால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: ``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு!" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா குப்பையிலிருந்து உரங்கள் தயாரிக்க ரூ.21 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களைப் நேரில் பார்வையிட்டு இத்திட்டம் சில தினங்களில் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதன்பின் பேசிய கலெக்டர் லலிதா, ``மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த இயந்திரங்களுக்கு மின்சார வாரியம் மூலம் தனியாக ஒரு மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த இயந்திரங்களை இயக்குவதன்மூலம் கொள்ளிடம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலிருந்து பெறப்படும் மக்கும் குப்பைகள் அரைத்து மாவாக்கப்படும். பின்னர் உரமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: `படித்தது 8-ம் வகுப்பு, கண்டுபிடித்தது கலக்கல் விவசாய கருவி!' - தென்னை விவசாயிகளுக்கு கைகொடுத்த நபர்
இதன் மூலம் குப்பைகளைக் கண்ட இடத்தில் கொட்டி சுகாதாரக் கேடு விளைவிக்காமல் இருக்க முடியும். இனி குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் சேமிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்காத குப்பைகளை மறுசுழற்சி பயன்பாட்டுக்கு அனுப்பப்படும். மக்கும் குப்பைகள் மட்டும் சேகரிக்கப்பட்டு, இந்த இயந்திரத்தின் மூலம் மாவாக அரைக்கப்பட்டு விவசாயிகள் வயலில் பயிருக்கு இடும் அளவுக்கு சத்துள்ள உரமாக தயார் செய்யப்பட்டு, தேவைப்படும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது'' என்று தெரிவித்தார். குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளதை அப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
from Latest News https://ift.tt/3C2TL5S
0 Comments