https://gumlet.assettype.com/vikatan/2021-07/bdceb507-38f9-4ab0-8960-07efeac96c18/a811f0e1_cff3_4247_b7dd_e7608d168ea1.jpg`சிறிய முதலீடு, இப்போது மாதம் ₹3 லட்சம் வரை வருமானம்!' - ஆன்லைன் பிசினஸில் அசத்தும் நித்யா

``இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு சுயசம்பாத்தியம் என்பது அடிப்படையான விஷயங்கள்ல ஒண்ணா மாறிடுச்சு. சம்பாத்தியம்னு ஒண்ணு இருந்தாதான் தன்னிறைவா வாழ முடியும். போதுமான வசதி இருந்தாலும், என் குடும்பத்துக்காக நான் ஈட்டும் வருமானம் என் அடையாளம். என் வருமானம் என் தன்னம்பிக்கையையும் அதிகரிச்சிருக்கு" - உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் நித்யா. மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய நித்யா, `ஹபாடா' என்ற தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சிறிய முதலீட்டில் வீட்டிலிருந்தே மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

நித்யா

``எனக்கு சொந்த ஊர் சென்னை. படிப்பு முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரியா வேலை பார்த்துட்டு இருந்தேன். கை நிறைய வருமானம் வந்தாலும் பிசினஸ் தொடங்கணும்னு ஆசை மனசுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு. பொதுவா பெண்கள் பணம் சம்பாதிக்கணும்னா அவங்க அரசாங்க வேலையில இருக்கணும், அல்லது ஒரு தனியார் நிறுவனத்துல 10 மணி முதல் 6 மணி வரை வேலை பாக்கணும். அரசு வேலை எல்லாருக்கும் சாத்தியம் இல்ல. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் நிறைய விஷயங்களைத் தியாகம் பண்ண வேண்டியிருக்கும். நிக்கக்கூட நேரம் இல்லாம ஓடிக்கிட்டே இருக்கணும்.

பிசினஸ் தொடங்குறதை பெரிய பட்ஜெட்டாகப் பாக்குறோம். பிசினஸ் எல்லாருக்கும் சாத்தியம் இல்லனு நம்ம மனசில பதிய வெச்சுருக்காங்க. அதனாலதான் பிசினஸ் தொடங்க முதலீடு வேணும், முன்அனுபவம் வேணும்னு நினைச்சுட்டு திறமை இருக்குற நிறைய பெண்கள் பிசினஸ் தொடங்குறதுல தயக்கம் காட்டுறாங்க.

business (Representational Image)

Also Read: `500 தொட்டிகள்; 9 வருஷமா கடைல காய்கறிகள் வாங்குறதே இல்ல!' - மாடித்தோட்டத்தில் அசத்தும் பெண் விவசாயி

இன்னைக்குப் பெரிய அளவில சக்சஸ் கொடுத்திருக்கும் எத்தனையோ தொழிலதிபர்கள், முன் அனுபவம் இல்லாமத்தான் அந்தத் துறைக்குள் காலடி எடுத்து வெச்சுருப்பாங்க. பிசினஸைப் பொறுத்தவரை துணிஞ்சு இறங்குனாதான் சக்சஸ் சாத்தியம் ஆகும். இட்லிப் பொடியில தொடங்கி எல்லாத்தையும் தொழிலா தொடங்கலாம். ஆனால் அந்தத் தொழில்ல ஜெயிக்கணும்னா, நம் பொருளுக்கான தேவை என்ன, நம்முடைய வாடிக்கையாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கணும். நம்முடைய பொருள் ஒரு பிரச்னைக்குத் தீர்வாவும், தனித்துவமாவும் இருக்கணும். அப்படி ஒரு பிரச்னைக்குத் தீர்வு கொடுக்கும் வகையில தொடங்குனதுதான் என்னுடைய பிசினஸ்.

நான் புடவைகளை அதிக அளவு பயன்படுத்தியது கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்காக புடவை கட்டும்போது, உள்பாவாடை இறுக்கமாக இருந்தது. கழிவறையைப் பயன்படுத்தினால் புடவையின் மடிப்பு கலையும் என்ற பயம். இப்படி, புடவை எனக்கு ரொம்ப அசௌகர்யமா இருந்துச்சு. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேட ஆரம்பிச்சேன். என் பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு உள்பாவாடையை நானே டிசைன் பண்ணினேன். அந்த மாடலை டெய்லர்கிட்ட கொடுத்து ரெடி பண்ணி வாங்குனேன்.

ஹபாடா உள்ளாடைகள்

கிட்டத்தட்ட அது ஒரு ஷேப்வியர் மாதிரிதான். நாடாக்கு பதிலா பட்டன் இருக்கும். பாவடையின் அடிப்பகுதியில் ஹேங்கிங் நாட்ஸ் இருக்கும் பாவடையை மடித்து ஹேங்கிங் நாட்ஸ்க்குள் கைகளைக் கோத்துக்கொண்டால் புடவையின் மடிப்பு கலையாமல் கழிவறையை பயன்படுத்தலாம். என்னுடைய பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில நான் உருவாக்கிய ஒரு பொருள்தான் `ஹபாடா' என்ற நிறுவனமா உருவெடுத்திருக்கு.

முதலில் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் வெவ்வெறு துணி வகைகளில் `ஹபாடா' ஷேப்வியர்களைத் தயார்செய்தேன். தோழிகள்கிட்ட கொடுத்து கருத்து கேட்டேன். எல்லாருமே பாசிட்டிவ்வான ரெவ்யூஸ்தான் கொடுத்தாங்க. அதனால இதையே பிசினஸா ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணினேன். உள்ளூர் தையல்காரங்ககிட்ட கொடுத்து தைச்சு வாங்கும்போது, பொருளின் அடக்க விலை அதிகமாச்சு. அதனால் திருப்பூரில் தையல் பார்ட்னர்களை தேர்வுசெஞ்சு மொத்தமா ஆர்டர் கொடுத்து வாங்குனேன். மெட்டீரியல் தேர்வு, தையல்காரர்கள், கொரியர் சர்வீஸ்னு பிசினஸ் தொடங்கும்போது நிறைய விஷயங்கள் சவாலா இருந்துச்சு. கொஞ்ச நாள்ல ஒரு தெளிவு கிடைச்சிருச்சு. பிசினஸுக்கு சரியான திட்டமிடல் ரொம்ப முக்கியம். அடிக்கடி பிசினஸ் பிளானை மாத்துனா வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது கடினமா மாறிடும்.

Instagram

Also Read: ஸ்மார்ட் இன்வெஸ்ட்டிங்... பெண்கள் ஏன் மாறவேண்டும்? | Nanayam Vikatan

பிசினஸ் பிளானை ஃபிக்ஸ் பண்ண பிறகு சமூகவலைதளங்கள்லதான் என் பொருள்களை விக்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு வெப்சைட் தொடங்கி அது மூலமா பிசினஸ் பண்றேன். ஆர்டர் வாங்குறது, பொருள்களை உரிய முகவரிக்குக் கொரியர் அனுப்புறது இந்த ரெண்டு வேலைதான் என்னுடையது. ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் வரை செலவிடுகிறேன்.

பெரிய அளவு முதலீடு இல்லாம இப்போ மாதம் மூன்று லட்சம் ரூபாய்வரை வீட்டில் இருந்தே சம்பாதிக்கிறேன். நம்ம பிசினஸ் சக்சஸ் ஆக முதலீடு முக்கியம் இல்ல. நம்ம ஐடியா, அதை விளம்பரம்படுத்தும் திறன், சமூக வலைதளங்களை பிசினஸுக்கு சரியா பயன்படுத்துற டெக்னிக்... இவையெல்லாம் இருந்தா குறைஞ்ச முதலீட்டுல எல்லாருக்குமே சக்சஸ் சாத்தியம்தான்" எனப் புன்னகைத்து விடைகொடுத்தார் நித்யா.

இதுபோன்று நீங்களும் புதிய பிசினஸ் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டுமா?

மாத்தி யோசி

அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் சார்பில் `மாத்தி யோசி!' என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. தொழில் தொடங்குவது, குறைந்த செலவில் மார்க்கெட்டிங், அதிக லாபம் பெறும் வழிமுறைகள் என்ன என்பது வரை விரிவான பயிற்சியளிக்கப்படும். பிசினஸ் பயிற்சியாளரும் மார்கெட்டிங் நிபுணருமான சக்திவேல் பன்னீர்செல்வம் பயிற்சியை வழங்கவுள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6.30 மணி வரை ஆன்லைனில் பயிற்சி நடைபெறும்.

`மாத்தி யோசி!' பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://bit.ly/3x5lCyo



from Latest News https://ift.tt/3BUPMbv

Post a Comment

0 Comments