https://gumlet.assettype.com/vikatan/2019-05/44932aea-54bc-481d-b4d1-8ac8ab8d8b7e/81468_thumb.jpg"தாலிபன்கள் பாசிட்டிவான மனநிலையில் இருக்கிறார்கள்!"- ஷாகித் அப்ரிடியின் பேட்டியும் சர்ச்சையும்!

ஒரு பிரஸ் மீட்டில் பேசிய அப்ரிடி, தாலிபன்களின் நடவடிக்கைகளைப் பற்றி நல்ல முறையில் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

"இந்த முறை தாலிபன்கள் ஒரு பாசிட்டிவான மனநிலையுடன் வந்திருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறார்கள். பெண்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். கிரிக்கெட் பற்றிய அவர்கள் பார்வையும் பாசிட்டிவாக இருக்கிறது. அவர்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.

அப்ரிடியின் இந்தப் பேட்டி வைரலாகிக்கொண்டிருக்கிறது. பலரும் அவரை விமர்சித்து பதிவிட்டுவருகின்றனர். தாலிபன் போன்ற ஒரு அமைப்பைப் பற்றி பொதுவெளியில் நல்லபடியாக அப்ரிடி போன்ற ஒருவர் பேசியிருப்பது, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

அப்ரிடி

இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் வீரர்கள், நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடந்த்தியிருந்தார் தாலிபன் மூத்த தலைவர் அனாஸ் ஹக்கானி. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் சேர்மேனான அஸிசுல்லா ஃபஸ்லி, மீண்டும் தற்காலிக சேர்மேனாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு போதுமான ஆதரவு தரப்படும் என்று கடந்த வாரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பிறகு தாலிபன்கள் கூறியிருந்தனர். நிச்சயம் கிரிக்கெட் தடை செய்யப்படாது என்றும் உத்திரவாதம் அளித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் சில பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மீட்டிங்கில், செப்டம்பர் 1 இலங்கையில் தொடங்கவிருந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்கு தாலிபன்கள் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அந்தத் தொடரில் மோதுவதாக இருந்தது. இதைத்தான் தன்னுடைய தாலிபன் பாராட்டுச் சான்றிதழில் அப்ரிடி குறிப்பிட்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலின் காரணமாக அந்தத் தொடர் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.



from Latest News https://ift.tt/3mKx7tN

Post a Comment

0 Comments