https://gumlet.assettype.com/vikatan/2019-11/c2f3afd1-e763-48bc-8f7b-c5122f1c6a68/maxresdefault.jpg'இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கு' சுகேஷ் பாலிவுட் நடிகையிடமும் கைவரிசை!

பிரபங்களை மிரட்டிப் பணம் பறித்தல், முடியாத காரியத்தை முடித்துக்கொடுப்பதாக கூறி மோசடி என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தற்போது டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. சுகேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது ஏற்கனவே ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக விசாரித்து வருகின்றனர். சுகேசும் அவனது ஆட்களும் சேர்ந்து தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

Also Read: `இரட்டை இலைச் சின்னம்' லஞ்ச வழக்கு; சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை - 20 சொகுசு கார்கள் பறிமுதல்!

தமிழகத்தில் டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருதரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி டிடிவி தினகரனிடம் ரூ.50 கோடியை சுகேஷ் வாங்கிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் சுகேஷ் பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதற்காக தனது மனைவியை சுகேஷ் பயன்படுத்தி இருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டசிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமலாக்கப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி கிடையாது. அவர் பாதிக்கப்பட்டவர். சுகேஷிற்கு எதிராக சாட்சியாகத்தான் விசாரிக்கப்பட்டது. சுகேஷ் தனது மனைவி லீனாபால் உதவியுடன் நடிகையிடம் பண மோசடி செய்துள்ளார். நடிகையிடம் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்து இருக்கிறது. வேறு ஒரு பிரபல நடிகரிடமும் சுகேஷ் தனது கைவரிசையை காட்டி இருக்கிறார். அவர் யார் என்று அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் யார் என்பதை தெரிவிக்க முடியாது" என்றனர். கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சென்னையில் சுகேஷிற்குச் சொந்தமான 82 லட்சம் மதிப்புள்ள பங்களா மற்றும் 15 -க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/3gN6UqN

Post a Comment

0 Comments