கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போடலாம் என்று ஐசிஎம்ஆர் கருத்து தெரிவித்திருக்கிறது. அதாவது, ஆரோக்கியமாக இருப்பவர்கள் அல்லது கொரோனா தொற்று ஏற்படாதவர்கள் இரண்டு டோஸ் கோவாக்சின் போட்டுக் கொள்ளும்போது உடலில் உருவாகிற அதே அளவு ஆன்டிபாடிதான், ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களுக்கும் இருப்பதை சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறது ஐசிஎம்ஆர். அதன்பிறகுதான் இந்த கருத்தைத் தெரிவித்திருக்கிறது.

Also Read: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக ஆன்டிபாடி உருவாகுமா? - புதிய ஆய்வு சொல்வது என்ன?
114 மருத்துவப் பணியாளர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையொட்டியே, கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போடலாம் என்றிருக்கிறது ஐசிஎம்ஆர். இந்த ஆரம்பகட்ட ஆராய்ச்சியை உறுதிப்படுத்த, அடுத்தகட்டமாக மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சி செய்யவும் ஐசிஎம்ஆர் ஒப்புக்கொண்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை ஆரம்பத்தில் 4 முதல் 6 வாரங்களுக்குள் செலுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அதன்பிறகு 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கோவாக்சின் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 4 முதல் 6 வார இடைவெளியில் செலுத்திக்கொள்ள வேண்டுமென்றே ஆரம்பம் முதல் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு டோஸ் கோவாக்சின் தடுப்பூசிக்கு இடையேயான கால அளவை அதிகப்படுத்துவதன் மூலம், மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் பெரும்பான்மை மக்களுக்குத் தடுப்பூசி வழங்க முடியும். தவிர, தடுப்பூசி வழங்குவதில் இந்தியா எதிர்கொள்கிற பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

Also Read: கோவாக்சின் தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு; முடிவுகள் சொல்வது என்ன?
இந்த வருடம் டிசம்பர் 31-க்குள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தகுதியான வயதில் இருக்கிற 94 கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றால், நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி டோஸ் தடுப்பூசியாவது தேவைப்படும்.
from Latest News https://ift.tt/3gOvuax
0 Comments