https://gumlet.assettype.com/vikatan/2021-08/b86818a8-580c-4198-8c1e-e95916b3b950/a532867c_7a77_4b1c_a136_3256d90fe0ee.jpgஆப்கன் பாடகரின் வேதனை: `ஓ என் தாயகமே!' - இணையத்தில் வைரலாகும் பாடல்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபன்கள் 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்' என்று அந்நாட்டின் பெயரை மாற்றி ஷரியத் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர். வீதிகளில் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் தாலிபன்களின் அச்சுறுத்தல்களால் பிற நாடுகளில் அகதிகளாகக் கூட வாழ்ந்து விடுகிறோம். பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிப் போயிருக்கும் ஆப்கானிஸ்தான் வேண்டாம் என்று உயிர் பயத்தில் தாய் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் பூர்வ குடிகள்.

Also Read: காபூல்: தொடர் குண்டு வெடிப்பு; பெண்களைத் தாக்கும் `ஐஎஸ்ஐஎஸ் - கே' - தாலிபன்களோடு கூட்டணியா?

காபூல் விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் மக்கள்

சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பில் தொடங்கி சுமார் 40 ஆண்டுகாலமாகப் போர்க்களமாக மாறி அதகளப்பட்டு கொண்டிருக்கும் ஆப்கனில் இனியும் வாழ்தல் கூடாதென்று குழந்தை குட்டிகளுடன், சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்த பணம், பொருள் என எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு காபூல் விமான நிலையத்தில் இரவு பகலாகக் காத்துக் கிடக்கின்றனர் வாழ்க்கை குறித்த ஓராயிரம் கேள்விகளுடன்.

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன. அதே போல், ஆப்கனிலிருந்து வெளியேறத் துடிப்பவர்களும் பல்வேறு நாடுகளின் விமானங்களின் அந்நாட்டு மக்களுடன் சேர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தாலிபன்களுக்கு பயந்து தனது தாய் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் அகதியாய் தஞ்சமடைந்திருக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஷரஃபத் பர்வானி (Sharafat Parwani) ஆப்கனின் பரிதாப நிலையை வலி மிகுந்த வார்த்தைகளைக் கொண்டு பாடலாகப் பாடியிருக்கிறார்.

பாடகர் ஷரஃபத் பர்வானி

அமெரிக்காவிலிருந்து கொண்டு ஆப்கனை நினைத்து பர்வானி சக ஆப்கன் மக்களுடன் பாடிய அந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பர்வானி பாடிய அந்த பாடலினை பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பெர்சிய மொழியில், ``என் தாயகமே, வேதனையால் நீ சோர்வடைந்து போய் உள்ளாய்!,

என் தாயகமே, பாடலின்றி, கீதங்கள் இன்றி சோர்ந்து கிடக்கிறாய்..!,

என் தாயகமே, வலித்தும் அதை ஆற்றுவதற்கான மருந்து இல்லாமல் நீ நிற்கிறாய்!”

என்று தனது கூட்டத்துடன் சோகமாகத் தாளமிட்டபடி பர்வானி பாடியிருக்கும் அந்த பாடல் இணையத்தில் காண்போர் நெஞ்சை நொறுக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

Also Read: `எந்த வேலையும் அவமானமில்லை' - ஜெர்மனியில் உணவு டெலிவரி பணி செய்யும் ஆப்கன் முன்னாள் அமைச்சர்!'



from Latest News https://ift.tt/3kGrlXk

Post a Comment

0 Comments