https://gumlet.assettype.com/vikatan/2021-06/a52e9b9e-f85c-49d0-9553-9d2a0f27cb79/vikatan_2019_11_7f034487_9cf6_4bf9_9572_c3e4072f82e3_001.jpg`தனி விமானம் வாங்க தெரிந்த மோடிக்கு, இதெல்லாம் பிரச்னையே இல்லை!’ -பாஜக எம்.எல்.ஏ கூறியது என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 26-ம் தேதி 2021-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி பேசிய காமராஜர் நகர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமார், “முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட்.

புதுச்சேரி சட்டப்பேரவை

சாமன்ய மக்கள் தொடங்கி அனைத்து மக்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்காக முதல்வர் திட்டம் தீட்டி இருக்கிறார். வேளாண், கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

புதுச்சேரி மாநிலம் முன்னேறுவதற்கு நிதி அதிகாரம் அதிகமாக தேவைப்படுகிறது. அதற்காக முதல்வர் பல யுக்திகளை பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறார். தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க முதலீட்டாளர்கள் மாநாட்ட நடத்துவது சிறப்பான ஒன்று. அதன் முலம் வேலை வாய்ப்பு பெருகுவதுடன், தனிமனித பொருளாதாரமும் உயரும்.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்

மாநிலம் உயர வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய குறிக்கோள். வருகிற 5 ஆண்டுகளுக்குள் புதுச்சேரிக்கு இருக்கும் கடன் தொகை ரூ.9,000 கோடியில் ரூ.3,000 கோடியையாவது தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அனைவரும் பிரதமரிடம் சென்று கேட்க வேண்டும்.

அப்போதுதான் புதுச்சேரி முன்னுக்கு வரும். கடனில்லாத மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும். அதேபோல புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். அப்போதுதான் நான் பா.ஜ.கவுக்கு சென்றதற்கு அர்த்தம் இருக்கும்.

Also Read: புதுச்சேரி: `எனக்கு அமைச்சர் பதவி என்றார்கள்! ஆனால்...’ பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் ஓப்பன் டாக்!

அப்படி இல்லையென்றால் நான் இனி தேர்தலிலேயே நிற்க மாட்டேன். இதில் எந்தவித மாற்றமுமில்லை. ரூ.8,000 கோடியில் தனி விமானம் வாங்க தெரிந்த பிரதமர் மோடிக்கு புதுச்சேரியின் ரூ.9,000 கோடி கடனை தள்ளுபடி செய்வது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. எனவே அவர் புதுச்சேரி மாநிலத்தின் கடனை தள்ளுபடி செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.



from Latest News https://ift.tt/3kCFy7M

Post a Comment

0 Comments