https://gumlet.assettype.com/vikatan/2021-08/c3b3613f-08e8-4e0d-b754-965e7801d3ed/corona_1.jfifகேரள மாணவர்கள் தினசரி வந்து செல்ல தடை! - கோவை மாவட்டத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, நாளை செப்டம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா வைரஸ்

Also Read: கோவை: விபத்தில் சேதமடைந்த போலீஸ் வேன்... 40 ஆண்டுகளுக்குப் பிறகு வின்டேஜ் லுக்குடன் மறுபிறப்பு!

“கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இயங்கும் நகை கடை மற்றும் துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ராமர் வீதி, சாரமேடு, ரைஸ்மில் சாலை, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஹோப் காலேஜ், காளப்பட்டி, டி.பி ரோடு, சரவணம்பட்டி , கணபதி பேருந்து நிலையம், காந்திமா நகர், ஆவாரம்பாளையம், ராஜவீதி, பெரியகடைவீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி,

கோவை ஊரடங்கு

தாமஸ் வீதி, சுக்ரவார் பேட்டை, கடைவீதி, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

பூங்காக்கள், மால்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்கள், அடுமனைகள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் 50 சதவிகித வாடிக்கையளர்களுடன் சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.

கோவை

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9 ,10 ,11 மற்றும் 12-ம் வகுப்புகள், கல்லூரி வகுப்புகள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்படும்.

அதேநேரத்தில், கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி வரும் மாணவ மாணவியர் தினசரி வந்து செல்ல அனுமதி இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், அனைத்து விடுதிகளும் மற்றும் பணிபுரியும் விடுதிகள் ஆகியோர் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரிசோதனை

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், அங்கிருந்து வரும் மாணவ-மாணவிகள் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதுடன், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்று இருப்பதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: கேரளாவில் எகிறும் பாதிப்புகள்; தமிழகத்தில் கொரோனா இப்போது, இனி..?



from Latest News https://ift.tt/3ytKWPp

Post a Comment

0 Comments