https://gumlet.assettype.com/vikatan/2021-08/ed363257-5c4c-47c1-8ced-f2bf8f8a1172/3a23905a_78aa_4156_b440_1e7ad77b1f4c.jpgதஞ்சாவூர்: `எல்லை தெய்வமாக நெனச்சு சரக டிஐஜியை சந்தித்தேன்!’ - பெண் சாமியார்

கழுத்து நிறைய நகைகள், ஆளுயுர மாலை அணிந்து தஞ்சாவூர் வந்த பெண் சாமியார் ஒருவர் போலீஸ் அதிகாரியான தஞ்சை சரக டிஐஜியை சந்தித்து பூங்கொத்து, எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினார். ``காவல் அதிகாரியாக அவரை சந்திக்கவில்லை. எல்லை தெய்வமாக நெனச்சு சந்தித்ததாக” அந்த பெண் சாமியார் கூறினார்.

பெண் சாமியார்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா. பெண் சாமியாரான இவர், திண்டுக்கல் மாவட்டத்தில் காளிக்கு கோயில் கட்டி ஸ்ரீ பவித்ரா காளி மாதா என்ற பெயரில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூருக்கு வந்த பெண் சாமியார் பல்வேறு கோயில்களுக்கு சென்று பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். முன்னதாக தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆசி வழங்குவதற்காக வந்தார்.

Also Read: பணத்தைத் தொலைத்த இளைஞன்; டிரைவர் கர்ணனின் நேர்மை; பாராட்டிய தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி!

அப்போது பெண் சாமியாரான ஸ்ரீ பவித்ரா கழுத்து நிறைய நகைகள் மற்றும் ஆளுயர மாலை அணிந்து வித்யாசமான தோற்றத்தில் வந்திருந்தார். வட மாநிலத்தில் பெண் சாமியாரான ஸ்ரீ பவித்ரா புகழ் பெற்று விளங்குவதாகவும், குறிப்பாக அவரிடம் ஆசி பெற்ற பிறகு பல அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏறுமுகம் கண்டதாகவும் சிலர் முதலமைச்சராக உள்ளார்கள் எனவும் பெண் சாமியாருடன் வந்த சிலர் அவரது புகழை பாடினர்.

போலீஸ் டிஐஜி அலுவலகத்திற்கு வந்த பெண் சாமியார்

இதையடுத்து, பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா டிஐஜி பிரவேஷ்குமாரை சந்தித்தார். பின்னர் கையில் எடுத்து சென்ற சிறிய அளவிலான பூங்கொத்தை கொடுத்ததுடன் எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினார். சில நிமிடங்கள் சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த பெண் சாமியார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், `` நான் அகில இந்திய இந்து யுவமோட்சா தர்மாச்சாரியா என்ற பட்டம் பெற்றிருக்கிறேன். திண்டுக்கல்லில் காளி கோயில் எழுப்பி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறேன். கரம்பயம் என்னோட பூர்வீக கிராமம்.

பெண்கள் சுமங்கலிகளாக இருக்கவும், பொதுமக்கள் கஷ்டம், சோதனை நீங்கி சுபிட்சத்துடன் இருக்கவும், விவசாயம் செழிப்பதற்காகவும் பொதுமக்களை சந்தித்து ஆசி வழங்க உள்ளேன். அதனை பெரிய கோயில் அமைந்துள்ள தஞ்சை மண்ணிலிருந்து தொடங்க உள்ளேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அருளாசி வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.

ஸ்ரீ பவித்ரா

தஞ்சாவூரில் பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று ஆசி கொடுப்பதற்கு முன், நம் எல்லைதெய்வமும், காவல் தெய்வமுமான போலீஸ் அதிகாரியான டிஐஜி பிரவேஷ் குமார் சாரை சந்தித்து ஆசி வழங்கினேன். காவல்துறை அதிகாரியாக அவரை நான் சந்திக்கவில்லை. எல்லை தெய்வமாக நெனச்சு சந்தித்து எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினேன். எனக்கு மத வேறுபாடு கிடையாது. மூன்று மதங்களுக்கும் உரிய கோயில்களை எழுப்புவேன். காளி எங்கிட்ட என்ன சொல்றாரோ அதை நான் மக்கள் கிட்ட ஆசியாக சொல்லுவேன்” என்றார்.

Also Read: சீர்காழி: 30 ஆண்டுகளுக்குப்பின் சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்... தொடங்கிய திருப்பணிகள்!

கழுத்தில் நகைகள், ஆளுயர மாலை அணிவித்து பெண் சாமியார் போலீஸ் அதிகாரியான டிஐஜியை சந்திக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கரம்பயம் முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று பக்தர்களிடம் ஆசி வழங்கிய பிறகு திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.



from Latest News https://ift.tt/3Dv6KOr

Post a Comment

0 Comments