ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், கடினமான காலங்களில், அவ்வப்ஓது தங்களுடைய ஆதரவைத் தொடர்ந்து நல்கி வருகிறது. பெருந்தொற்று கால இரண்டாம் அலையும் சோதனை தருவதாகத் தான் உள்ளது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், தக்க தருணத்தில் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட மக்களுக்கு உணவு, நிதியுதவி, மருத்துவ சாதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கணிசமான தொகையையும் அளித்துள்ளது.
இந்தச் சோதனை காலகட்டத்தில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் அறக்கட்டளையால் கட்டப்பட்டு வருகிற சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூட கட்டிடத்திற்காக, ரூ. 75 லட்சம் நிதியை அளிக்க உள்ளது. இதன் முதல் தவணையாக ரூ. 25 லட்சத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆனந்தம் அறக்கட்டளைக்கு அளித்து உள்ளது. ஆனந்தம் அறக்கட்டளை மூத்த குடிமக்களுக்குக் கட்டணமில்லா இல்லத்தையும் நடத்தி வருகிறது.
இந்தப் பங்களிப்பின் வாயிலாக, சாத்தியமான தருணங்களில் எல்லாம் சமுதாயத்திற்குத் திருப்பி அளிப்பதை அர்பணிப்பு உணர்வுடன் இந்நிறுவனமானது மேற்கொண்டு வருகிறது என்பது பறைசாற்றப்பட்டுள்ளது.
from Latest News https://ift.tt/2WDq63f
0 Comments