https://gumlet.assettype.com/vikatan/2021-08/cd7d0e9c-bbf5-4811-aac3-2ca79e363304/4a03408d_805e_46c7_9718_e998a5db5493.jpgநிறுத்தப்பட்ட திருமணம்; முகநூலில் ஆபாச போட்டோ; விசிக முன்னாள் பிரமுகர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள நாஞ்சிகோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைய நம்பி (41) விடுதலை சிறுத்தை கட்சியின் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி செயலாராக இருந்தார். சில மாதங்களுக்குமுன்பு தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அறிவுடை நம்பியின் மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அறிவுடை நம்பி முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி கடலுாரைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவருடன் திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்திருந்தார். அந்த பெண்ணும் ஏற்கெனவே திருமணமானவர் அவருக்கும் ஒரு மகன் உள்ளதாகத் தெரிகிறது. கடந்த மே மாதம் 18-ம் தேதி திருமணமத்திற்கான தேதி குறித்து அதற்கான ஏற்பாட்டை செய்து வந்தனர்.

Also Read: `கோயிலில்வைத்து அத்துமீறினார்!’ - இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மீது எஸ்.பி அலுவலகத்தில் பெண் புகார்

திருமணம் நின்றதால் இளம் பெண் போட்டைவை ஆபாசமாக சித்தரித்த அறிவுடை நம்பி

இதையடுத்து திருமணத்திற்கு நான்கு நாள்களுக்கு முன்பு அறிவுடை நம்பி தன்னுடைய வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தது திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்ணுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அறிவுடை நம்பி, அப்பெண்ணுடன் தான் எடுத்துக் கொண்ட புகைபடத்தை ஆபாசமாகச் சித்தரித்து, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்த நிலையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து அறிவுடைநம்பியை தேடினர்.

மேலும் புகார் அளித்த பெண்ணை,அறிவுடைநம்பி போனில் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.அதனையும் அந்த பெண் போலீஸாருக்குப் புகாராக அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அறிவுடை நம்பி தலைமறைவான நிலையில் தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி., ரவளிப்ரியா உத்தரவின்பேரில், வல்லம் அனைத்து மகளிர் போலீஸார், சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்து இருந்த அறிவுடைநம்பியை போலீஸார் கைது செய்தனர்.மேலும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.



from Latest News https://ift.tt/3Bx7YXL

Post a Comment

0 Comments