பீச் மல்யுத்தம் - கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா பகுதிகளில் மிகவும் பிரபலம். மணலில் மேட் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் போட்டியே மல்யுத்தத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இதன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மல்யுத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. முன்பு பாயின்ட் சிஸ்டம், விதிமுறைகள் வேறு மாதிரி இருந்தாலும், இப்போது கிட்டத்தட்ட மல்யுத்தம் போலத்தான் வழங்கப்படுகிறது.
மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை விடுதியில், கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலும் இருந்து 23 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் மல்லுக்கட்டினர். மகளிர் பிரிவில் 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ மற்றும் 70+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் மற்றும் ஆண்கள் பிரிவில் 70 கிலோ, 80 கிலோ, 90 கிலோ மற்றும் 90+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் என மொத்தம் 8 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வழக்கமாக மல்யுத்தத்தில் தலா மூன்று நிமிடங்களுக்கு இரண்டு சுற்றுகள் நடைபெறும் நிலையில், பீச் மல்யுத்தத்தைப் பொறுத்த வரையில் மூன்று நிமிடங்களுக்கு ஒரேயொரு சுற்று மட்டுமே நடத்தப்படுகிறது.

பல நாடுகளில் பிரபலமான இந்தப் போட்டியை இந்தியாவிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் முதல் தேசிய பீச் மல்யுத்தப் போட்டி மஹாபலிபுரத்தில் நடத்தப்பட்டது. இதன் முதல் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு மாநில கூட்டமைப்பும் ஒரு பிரிவில் அதிகபட்சமாக 3 வீரர்களை களமிறக்க அனுமதிக்கப்பட்டது.
Also Read: 'நவரசா'வை கிரிக்கெட்டில் காட்டிய ஆண்ட்ரே ரசல்... அதிவேக அரைசதம் அடித்து ஐபிஎல்-க்கு முன்னோட்டம்!
OPJS அணியின் சுமித் குலியா (ஆண்கள் 90+ கிலோ பிரிவு), பூஜா (பெண்கள் 70+ கிலோ பிரிவு); ஹரியானாவின் ராபின் சிங் (ஆண்கள் 90 கிலோ பிரிவு), ஹன்னி குமாரி (பெண்கள் 50 கிலோ பிரிவு), பிரீத்தி (பெண்கள் 60 கிலோ பிரிவு); மஹாராஷ்டிராவின் சமீர் (ஆண்கள் 80 கிலோ பிரிவு), ரவி ராஜ் (ஆண்கள் 70 கிலோ பிரிவு); ராஜஸ்தானின் மோனிகா (பெண்கள் 70 கிலோ பிரிவு) ஆகியோர் முதலிடம் பெற்று அசத்தினார்கள்.
from Latest News https://ift.tt/2UZ5524
0 Comments