https://gumlet.assettype.com/vikatan/2021-08/75f1d78f-f7ba-4191-9d08-4ea6734d91ea/a8c53c04_be4c_42b7_aff4_e5881d7a429f.jpgபணத்தைத் தொலைத்த இளைஞன்; டிரைவர் கர்ணனின் நேர்மை; பாராட்டிய தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி!

கும்பகோணம் மடத்துத் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா- ராமராஜன் தம்பதியின் மகன் சூர்யா. இவர்களுக்குச் சொந்தமான வீட்டில் ஒத்திக்கு குடியிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்வதாகக் கூறினர். எனவே, ஒத்தி பணம் மூன்றரை லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுப்பதற்காக சூர்யா எடுத்துச் சென்றிருக்கிறார். கும்பகோணம் பகுதியிலிருந்து தஞ்சாவூர் சாலையில் வரும்போது பாபநாசம் திருப்பாலத்துறை மெயில் ரோட்டில் மஞ்சள் பையில் வைத்திருந்த பணம் கீழே விழுந்துள்ளது. இதில் ரூ 500 நோட்டு கட்டாக இருந்த பணம் சாலையில் சிதறியுள்ளது. சூர்யா இதனைக் கவனிக்காமல் சென்றுவிட்டார்.

போலீஸ் விசாரணை

Also Read: வேலூர்: அதிவேகமாக வந்த லாரி; சமயோஜிதமாகச் செயல்பட்ட சிறுவன்! - வீட்டுக்கே சென்று பாராட்டிய எஸ்.பி

சாலையில் ரூ 500 நோட்டுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதியினர் ஓடிச் சென்று பணத்தை எடுத்துள்ளனர். சூர்யா டூவீலரில் செல்லும்போது அவரின் பின்னால் சென்று கொண்டிருந்த சென்ற திருக்காட்டுப் பள்ளியை சேர்ந்த அரசு பேருந்து டிரைவரான கர்ணன் என்பவர் இதனைக் கவனித்துள்ளார். உடனடியாக அவர் வந்த வாகனத்தை விட்டு இறங்கி கீழே கிடந்த பணத்தை எடுத்துள்ளார். அத்துடன் பணத்தை எடுத்த சிலரிடம் பணத்தைப் பெற்று பாபநாசம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விவரத்தைக் கூறி பணத்தை ஒப்படைத்துள்ளார்.

பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூர்யா பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு கீழே விழுந்த பணம் அவருடையதுதானா என்று இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை மேற்கொண்டதில் அந்த பணம் சூர்யாவுடையது என்பது உறுதியானது. இந்த விவகாரம் தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப் பிரியாவிடம் விசாரணைக்குச் சென்றது.

பாராட்டு பெற்ற டிரைவர் கர்ணன்

சம்பவத்தை விசாரித்த எஸ்.பி, சூர்யாவை எஸ்.பி அலுவலகத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட மூன்றரை லட்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் பணத்தை எடுத்துக் கொடுத்த டிரைவர் கர்ணணைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ் வழங்கினார்.



from Latest News https://ift.tt/3t8Klli

Post a Comment

0 Comments