கோவை மதுக்கரை போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாச்சிபாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ் உடலில் கிட்டத்தட்ட 16 வெட்டு காயங்கள் கண்டறியப்பட்டன.

Also Read: குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட நேபாள நாட்டுப் பெண்?! - கோவை அதிர்ச்சி
இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட உதயகுமார், சந்தோஷ், ரகுகிருஷ்ணன், சஞ்சீவ்குமார் மற்றும் உயிரிழந்த ரமேஷ் அனைவருமே மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்ப்பதற்காக இந்த கொலை நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுக்கரை பகுதியில் நண்பருடன் தங்கியிருந்த ஜீவானந்தம் என்பவர் போதை ஊசிக்கு அடிமையாகியிருந்தார். அவருடன் ஒன்றாக தங்கியிருந்த மணிகண்டன் தான் அவருக்கு போதை ஊசி பார்ட்னர்.
Also Read: `12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ - அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்
கடந்த ஜூன் மாதம் போதை ஊசிக்கு ஏற்பட்ட தகராறில் ஜீவானந்தத்தை மணிகண்டன் கொலை செய்துவிட்டார். ரமேஷின் வழிநடத்துதலில் தான் மணிகண்டன் ஜீவானந்தத்தை கொலை செய்ததாக கூறப்பட்டு வந்தது. கைதான நான்கு பேரில் மூன்று பேர் ஜீவானந்தத்தின் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஜீவனாந்தம் கொலைக்கு பழிக்கு பழி வாங்க, சமயம் பார்த்து காத்திருந்தனர். அதற்கான வாய்ப்பு அமைந்ததும் ரமேஷை கொலை செய்துவிட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
from Latest News https://ift.tt/2WDh99A
0 Comments