சென்னையைச் சேர்ந்த ஊக்கம் அறக்கட்டளை, மனநலம் மற்றும் நலவாழ்வு சேவைக்கான அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது.
இன்றைய நவீன வாழ்க்கை முறை கொண்டுவந்திருக்கும் மன அழுத்தம், மன நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கும் சேவையை ஊக்கம் அமைப்பு மேற்கொண்டிருக்கிறது.
அந்தச் செயல்பாட்டின் ஓர் அங்கமாக, ‘Mental health for all’ என்ற மனநல விழிப்புணர்வுப் பேரணியை அக்டோபர் 31 (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒருங்கிணைக்கிறது. சைக்கிள் பேரணி மூலம் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ‘அனைவருக்கும் மனநலம்’ முன்னெடுக்கப்படுகிறது.
அக்டோபர் 31 அன்று காலை 6.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் தொடங்கும் இந்த சைக்கிள் பேரணி, செம்மொழிப் பூங்காவில் முடிவடைகிறது.
ஆர்வம் உடையவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொண்ட மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 9688440032, 8680800119, 9791871243
from Latest News https://ift.tt/3EvMLid
0 Comments