https://ift.tt/3HqdUEW to series: வீட்டிலேயே குல்ஃபி செய்வது எப்படி? | How to make kulfi at home?

அடுத்தடுத்து விடுமுறை நாள்கள் வரவுள்ளன. வீட்டிலேயே குல்ஃபி செய்து குடும்பத்தினரோடு பரிமாறி மகிழ வேண்டுமா? உங்களுக்காகவே இந்த ரெசிப்பி.

நட்ஸ்

Also Read: How to series: வீட்டிலேயே கேக் செய்வது எப்படி? | How to prepare cake at home?

தேவையானவை:

- நட்ஸ் பவுடர் - கால் கப் (முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, அக்ரூட், பிஸ்தா, சாரைப்பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தது)
- சர்க்கரை சேர்க்காத கோவா - 100 கிராம்
- சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன்
- குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
- குல்ஃபி எசனஸ் - 2 துளிகள்
- கொழுப்பு நீக்காத பால் - அரை லிட்டர்
- ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
- சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் (சிறிது எடுத்து தனியாக வைக்கவும்), கோவா, சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை குறைந்த தீயில்வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். பால் சுண்டி வரும் சமயம், சிறிது பாலில் சோள மாவைக் கரைத்து, இதில் சேர்க்கவும். இப்போது அடர்த்தி அதிகரித்திருக்கும்.

டேஸ்டியான நட்ஸ் குல்ஃபி ரெசிப்பி!

Also Read: How to series: How to make Mayonnaise at home? | வீட்டிலேயே சுலபமாக மயோனிஸ் தயாரிப்பது எப்படி?

அதில் நட்ஸ் பவுடர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். கலவையில் குல்ஃபி எசன்ஸ் சேர்த்து ஆறவிடவும். குல்ஃபி மோல்டில் இந்தக் கலவையைச் சேர்த்து, ஃப்ரீஸரில் 10 மணி நேரம் வைத்து எடுத்துச் சுவைக்கவும்.



from Latest News https://ift.tt/3z9vzxF

Post a Comment

0 Comments