எனக்குத் தலைவலியும் காய்ச்சலும் இருந்தது. டெஸ்ட் செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது. கொரோனா தொற்றுக்குள்ளானதன் முதல் நாள் என்று எப்படிக் கணக்கிடுவது? காய்ச்சல், தலைவலி என அறிகுறிகள் ஆரம்பித்த நாளிலிருந்தா அல்லது பாசிட்டிவ் என உறுதியான நாளிலிருந்தா? நான் எப்போது வெளியே வருவது?
- மனோஹர் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.
``நீங்கள் இன்றுதான் டெஸ்ட் எடுத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் உங்களுக்கு பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. அதிலிருந்து 7 நாள்கள் உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 7 நாள்கள் முடிவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு உங்களுக்கு எந்த அறிகுறியும் பிரச்னையும் இல்லை என்றால் நீங்கள் 7வது நாள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வரலாம்."
கொரோனா தொற்றுக்குள்ளான என் கணவரை கடந்த வாரம் முழுவதும் உடனிருந்து பார்த்துக்கொண்டேன். அவருக்கு மிகவும் மைல்டான அறிகுறிகளே இருந்தன. எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. தொற்றாளருடன் இருந்ததால் நானும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?
- திவ்யா சுரேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

Also Read: Doctor Vikatan: மாலையில் போகும் வாசனை உணரும் திறன், காலையில் திரும்புகிறது; என்ன பிரச்னை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.
``உங்களுக்கு அறிகுறிகள் இல்லை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். மற்றபடி உங்கள் வயது, உங்களுக்கு வேறு ஏதும் இணைநோய்கள் உள்ளனவா என்ற விவரங்கள் இல்லை. இளவயதுதான், இணைநோய்களும் இல்லை என்ற பட்சத்தில், தொற்றாளருடன் இருந்தாலும் அறிகுறிகள் இல்லாத நபர்கள் டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதுவே வயதானவர், நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர் என்றால் நிச்சயம் டெஸ்ட் செய்து பார்ப்பதுதான் பாதுகாப்பானது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/3AEkBRj
0 Comments