https://gumlet.vikatan.com/vikatan/2022-02/73f7d31d-9660-4a2a-8ab0-007a9e7abd35/owaisi_0_3.webp``எல்லா மசூதிகளிலும் சோதனை நடத்தலாம்; ஒருவேளை...” - ஒவைசிக்கு பாஜக எம்.பி சவால்

தெலங்கானா மாநிலத்தின் பாஜக தலைவரும், எம்.பி-யுமான பண்டி சஞ்சய் குமார், தெலங்கானாவில் அனைத்து மசூதிகளிலும் சோதனை நடத்தலாம் என்று, ஒவைசிக்கு சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே, மதுரா, கியான்வாபி போன்ற மாசூதி தொடர்பாக சர்ச்சைகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளும் தொடரப்பட்டன. அதிலும், கியான்வாபி மசூதி விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், மசூதியினுள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டன. இதுபோன்ற விவகாரங்களுக்கு மத்தியில், `தற்போதுள்ள எந்த மசூதியையும் கோயிலாக மாற்ற முடியாது' என ஒவைசி கூறியிருந்தார்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் நடந்த 'இந்து ஏக்தா யாத்திரை'யில் உரையாற்றிய எம்.பி பண்டி சஞ்சய் குமார், ``இங்கு மாநிலத்தில் கடந்த காலங்களில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் பல கோயில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஒவைசி

இதன் மூலம் ஒவைசிக்கு நான் சவால் விடுகிறேன். தெலங்கானாவில் உள்ள அனைத்து மசூதிகளையும் தோண்டி எடுப்போம், எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மசூதிகளை அவர்களிடம் விட்டுவிடுவோம். ஆனால், ஒருவேளை சிவலிங்கங்கள் கிடைத்தால், அவற்றைக் கைப்பற்றுவோம். இதற்கு அவர் தயாரா?" என ஒவைசிக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ``பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அனைத்து மதராசாக்களையும் ஒழிப்போம். சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகியோருக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவோம். அதுமட்டுமல்லாமல், இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியான உருதுவை நிரந்தரமாக நீக்குவோம்" எனக் கூறினார்.



from Latest News https://ift.tt/IWn0jLo

Post a Comment

0 Comments