https://ift.tt/AiQrLZl Vikatan: குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை கொடுக்கலாமா?

சைவ உணவுப்பழக்கமுள்ள குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரைகள் கொடுக்கலாமா? அந்த மாத்திரைகளின் பயன் என்ன?

கண்ணன் (விகடன் இணையதளத்திலிருந்து...)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

மீன் எண்ணெயில் Eicosapentaenoic Acid (EPA) and Docosahexaenoic Acid (DHA) என்கிற இரண்டு வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த இரண்டும் குழந்தைகளின் நரம்பியல் மண்டல ஆரோக்கியத்துக்கும், ஐக்யூ முன்னேற்றத்துக்கும் உதவும்.

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் இதுபோன்ற அசைவ ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டுகளைதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது இப்போது சைவத்தயாரிப்பாக கேப்ஸ்யூல் மற்றும் சிரப் வடிவிலும் கிடைக்கிறது.

குழந்தைகள்

தவிர, அந்தச் சத்தை ஃபிளாக்ஸ் சீட்ஸ், பாதாம் மற்றும் வால்நட்ஸ் மூலமாகவும் பெற முடியும். எனவே, குழந்தைகள் விஷயத்தில் நீங்களாக எந்த சத்து மாத்திரையோ, சப்ளிமென்ட்டையோ கொடுக்காமல், உங்கள் குழந்தையின் மருத்துவரை ஆலோசித்து அவர் சொல்வதைப் பின்பற்றுவதே சிறந்தது.



from Latest News https://ift.tt/8WK20oZ

Post a Comment

0 Comments