GRT ஜூவல்லர்ஸ் தெய்வீகமான வேலைப்பாடு மற்றும் மாசற்ற வெள்ளி ஆகிய இரண்டும் சங்கமிக்கும் பிரமிப்பூட்டும் வகையிலான வெள்ளிரகங்களை வழங்குகிறது. மிகவும் அப்பழுக்கற்ற கலைத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட டிசைன்களைக் கொண்ட இந்த புதிய ரக வெள்ளிப் பொருட்கள் மூன்று விதங்களில் அதாவது கண்கவர் வெள்ளி ஆபரணங்கள், நேர்த்தியான டின்னர் செட்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகிய வகைகளில் கிடைக்கின்றன. இவை உங்கள் வழிபாட்டிற்கு தெய்விக உணர்வை கூட்டுவதோடு உங்கள் வீட்டிற்கு வசீகரமான அழகையும் கொணர்ந்தளிக்கின்றன. 1964-ஆம் ஆண்டு முதல் GRT ஜூவல்லர்ஸ், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் வாங்குவதற்கேற்ற வசதியான சூழல் ஆகியவற்றை மையமாகக் கொண்டே அதன் பாரம்பரியத்தை கட்டமைத்து வந்துள்ளது. வெள்ளி ரகங்களுக்கு மேலும் தனித்துவ சிறப்பை அளிக்கும் விதத்தில் வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் மீது 25%* தள்ளுபடி மற்றும் வெள்ளி ஆபரணங்களின் MRP மீது 10%* தள்ளுபடி ஆகிய சிறப்பு சலுகைகளை GRT அளிக்கிறது.
வெள்ளிப் பொருட்களின் புத்தம் புதிய ரகங்கள் குறித்து GRT ஜூவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் திரு.G.R. 'அனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறும்போது, "வெள்ளியின் தனிச்சிறப்பு என்னவெனில் அதனை அணிந்து கொள்பவர்களை தனியாக சிறப்பித்து காட்டிவிடும். இந்த சிறப்பியல்பினைத்தான் நாங்கள் டிசைனின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிக்கொணர்ந்து இந்த ரகத்திற்கு உண்மையில் ஒரு தெய்வீக தோற்றத்தை அளிக்க முயற்சித்துள்ளோம்” என்றார்.
இதுகுறித்து GRT ஜூவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர், திரு G.R.ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும்போது, “இந்த விழாக்காலத்தில் தனித்துவமான கலெக்ஷனை வழங்குவதில் எங்கள் குழுவினர் சிறப்பு கவனத்துடன் செயல்பட்டுள்ளார்கள். மேலும், எங்கள் வாடிக்கையாலர்களுக்கு பல சிறப்பு சலுகைகளுடன் ஓர் இனிய ஆச்சரியத்தையும் அளித்து இத்தருணத்தை அவர்கள் நினைவில் விட்டு அகலாத ஒன்றாகச் செய்யவும் எண்ணினோம். இதே ரீதியில் தான் எல்லா தருணங்களிலும் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் GRT தயாரிப்புகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது,” என்றார்.
from Latest News https://ift.tt/tlgO8IY
0 Comments