கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடினங்குளம் பகுதியில் கான்வென்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கான்வென்ட் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடிருந்தனர். அப்போது ரோட்டோரம் கான்வென்ட் சுவரை ஒட்டி ஒரு பைக் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது. அந்த பைக் குறித்த விபரங்களை பெற போலீஸார் முயன்றுகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கான்வென்டுக்குள் இருந்து காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து நான்குபேர் வெளியே சாடினர். பைக் பற்றி விசாரித்துக்கொண்டிருந்த போலீஸார் அந்த நான்குபேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது ரோட்டோரம் நின்ற பைக் அந்த வாலிபர்களுடையது என தெரியவந்தது. நான்கு வாலிபர்களும் கான்வென்டுக்குள் திருடிவிட்டுதான் சுவர் ஏறிகுதித்து வெளியே வந்துள்ளனர் என நினைத்த போலீஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.
விசாராணையில் அந்த வாலிபர்கள் வலியதுறை பகுதியைச் சேர்ந்த மேர்சன்(23), அருண்(21), ரஞ்சித்(26), டேனியல்(20) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கான்வென்டுக்குள் சென்று மூன்று சிறுமிகளுக்கு பலவந்தமாக மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி போலீஸாரை அதிர வைத்தனர். கான்வென்டில் தங்கி படிக்கும் மூன்று சிறுமிகள் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானதாகவும், அவர்களை சந்திக்க சுவர் ஏறிக்குதித்து கான்வென்டுக்குள் சென்றதாகவும், பின்னர் அந்த சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை செய்ததாகவும் வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் கான்வென்டுக்குள் சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து 4 வாலிபர்கள் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்தபோலீஸார், அவர்களை ஆற்றிங்கல் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
from Latest News https://ift.tt/6AZT0He
0 Comments