விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நுண்ணுயிரிகள் இருப்பது முன்னரே கண்டறியப்பட்ட ஒன்று. இந்த நுண்ணுயிரிகள் மாறுபட்ட தட்பவெப்ப ஏற்ற சூழ்நிலையில் வளரும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த நுண்ணுயிரிகளால் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து நாசாவுடன் இணைந்து தற்போது புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கிறது ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். இந்த ஆராய்ச்சிக்கு முன்னதாகவே விண்வெளியில் க்ளெப்சியலா நிமோனியா என்றொரு நுண்ணியிரி இருப்பது கண்டறியப்பட்டது. பூமியில் வாழும் மனிதர்களுக்கு நிமோனியா தொற்றினை பரப்பவல்லது இந்நுண்ணுயிரி. இந்த ஆராய்ச்சியின் முடிவில், க்ளெப்சியலா நிமோனியா பல்வேறு நுண்ணுயிரிகளுடன் கூட்டுறவு வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள பன்டோயா வகையைச் சார்ந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்கு உறுதுணை புரிவதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்பெர்ஜிலஸ் வகை பூஞ்சைகள் வளர்வதை இந்நுண்ணுயிரிகள் தடுத்து நிறுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஐஐடி மெட்ராஸில் உள்ள ராபர்ட் போஸ்ச் தரவறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் உள்ள இணை பேராசிரியர் டாக்டர் கார்த்திக் ராமன் உடன் இணைந்து நாசா விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் புகழ்பெற்ற மைக்ரோபையோம் என்ற ஆராய்ச்சி நாளிதழில் பதிப்பித்துள்ளனர். இது குறித்து பேசும் டாக்டர் கார்த்திக் ராமன், " சர்வதேச விண்வெளியில் இருக்கும் மைக்ரோ பையோம் ஒரு பாதுக்காக்கப்பட்ட சூழலைக் கொண்டதாகும்.
அங்கு இருக்கும் நுண்ணியிரிகளின் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் அளிக்கக் கூடியன. ஆனால் இந்த நுண்ணியிரிகளுக்கிடையே நடக்கும் கூட்டுறவினால் விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு ஏதாவது தீங்குகள் ஏற்படுமா? என்பது குறித்து கண்டறிய தான் இந்த ஆராய்ச்சி மேற்கோள்ளப்பட்டது " என்றார்.
மேலும் இது குறித்து பேசும் நாசா விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் " பாதுக்காக்கப்பட்ட சூழலைக் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் மூலம் பல்வேறு நுண்ணுயிரிகள் பரப்பப்படுகிறது. அதே போல நுண்ணுயிரிகள் பூமியில் வாழ்வதற்கும், விண்வெளியில் வாழ்வதற்குமான சூழல் மாறுபட்டது. அதனால், மனிதர்கள் பாதுகாப்பாய் விண்வெளி சென்றுவிட்டு திரும்பிவர இந்த நுண்ணுயிரிகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் " என்று தெரிவித்தார்.
from Latest News https://ift.tt/1DAoZ34
0 Comments