இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த விமான நிலையத்தில், பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட விவாதம் சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து விமானங்களில் இந்தியர்கள் தேவையில்லாத வம்படி சண்டைகளில் ஈடுபடுவதாகக் கருத்துகள் கிளம்பின.

தற்போது பேங்காக்கில் இருந்து கொல்கத்தாவிற்குச் சென்ற விமானத்தில் பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், முதலில் வாக்குவாதம் ஆரம்பித்து, சண்டை சூடு பிடிக்கிறது. நண்பர்களாக வந்த நால்வர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு ஒருவரைத் தாக்கி, தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கின்றனர்.
அவரால் பதிலுக்குத் தாக்க முடியவில்லை. தொடர்ச்சியாக அடிவாங்கிக் கொண்டே இருக்கிறார். விமானப் பணிப்பெண் நிலைமையைச் சரிசெய்யப் போராடிக் கொண்டிருக்கிறார். மற்றொரு திசையில் மற்றொரு விமானப் பணிப்பெண் புகாரளிக்க போன் செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Bangkok To kolkata flight pic.twitter.com/8KyqIcnUMX
— Munna _Yadav %FB (@YadavMu91727055) December 28, 2022
இந்தச் சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ``தாய் ஸ்மைல் ஏர்வேஸ், இதற்காக வருந்துகிறது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப விமான பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதனால் இந்தச் சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்தது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்ட பயணிக்கு, விமான ஊழியர்கள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
from Latest News https://ift.tt/L7ak5AS
0 Comments