https://gumlet.vikatan.com/vikatan/2023-06/5853ac81-60d0-418b-b124-33c7c15998e7/1b4d2373-85d6-4ff1-ac82-08645815f132.jpgவடஸஅப டப-ய வதத ஒர கட ரபய மசட... பகர' களபபம பகர நடவரக

சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் (profile photo) ப்ரோபைல் போட்டோவாக வைத்திருந்த நம்பரிலிருந்து எனக்கு வாட்ஸ்அப் கால் வந்தது. அதில் பேசியவர், என்னுடைய எம்.டி (நிர்வாக இயக்குநர்) போல என்னிடம் பேசினார். பின்னர் அவசரமாக தான் சொல்லும் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பும்படி தெரிவித்தார். அதை உண்மையென நம்பி, நானும் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,16,78,840 ரூபாயை அனுப்பிவைத்தேன். அதன் பிறகுதான் என்னிடம் பேசிய நபர், நிர்வாக இயக்குனரின் புகைப்படத்தை வைத்து என்னை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மோசடி நபர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சயீஃப் கான்

இந்தப் புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரை விசாரிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த சைபர் க்ரைம் பிரிவு போலீஸார், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் நம்பர்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றனர். அதனடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்த செல்போன் நம்பர்கள், இமெயில் உள்ளிட்ட விவரங்களையும் போலீஸார் சேகரித்தனர். இதையடுத்து இந்த சைபர் க்ரைம் மோசடியில் ஈடுபட்டவர்கள், பீகாரில் பதுங்கியிருப்பதை சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் உறுதிப்படுத்தினர்.

பின்னர், அவர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பீகாருக்குச் சென்று மோசடியில் ஈடுபட்டவர்களை ஏ.டி.எம் மையங்களிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியோடு ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது ஏ.டி.எம் மையங்களில் பணத்தை எடுத்தது பீகார் மாநிலம், கோபால்கானியைச் சேர்ந்த சயீஃப் கான் (22), ராஜ்ராய் சிங் (28) ஆகியோர் எனத் தெரியவந்தது. அதனால் அவர்களைப் பிடித்து விசாரித்தபோதுதான் இந்த மோசடிப் பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஒன்று செயல்படுவது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து மோசடி கும்பலுக்கு ஏ.டி.எம் மையங்கள் மூலம் பணத்தை எடுத்துக் கொடுத்த சயீஃப் கான், ராஜ்ராய் சிங் ஆகியோரை தனிப்படை போலீஸார் கடந்த 23-ம் தேதி கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான இருவரையும் பீகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தனிப்படை போலீஸார், பின்னர் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

ராஜ்ராய் சிங்

இந்த மோசடி குறித்து நம்மிடம் விவரித்த சென்னை சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``தமிழகத்திலுள்ள நிறுவனங்கள், கம்பெனிகளின் ஓனர்கள், உயரதிகாரிகள் குறித்த விவரங்களை இணையதளங்கள் மூலம் இந்த மோசடிக் கும்பல் முதலில் சேகரிக்கும். பின்னர், அந்த நிறுவனத்தின் ஓனர்கள் மற்றும் உயர்பதவியிலிருக்கும் அதிகாரிகளின் புகைப்படங்களையும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எடுப்பார்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப்பில் கால் செய்யும் இந்தக் கும்பல், அங்குள்ள ஊழியர்கள் நம்பும்படி வாட்ஸ்அப்பில் ஓனர்கள் மற்றும் உயரதிகாரிகளின் புகைப்படங்களை டி.பி போட்டோவாக வைத்திருக்கும்.

அதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் ஓனர் மற்றும் உயரதிகாரிகள்தான் வாட்ஸ்அப் காலில் பேசுகிறார்கள் என நம்பி, மோசடிக் கும்பலிடம் பேசுவார்கள். அதன் பிறகே தங்களின் மோசடித் திட்டத்தை இந்தக் கும்பல் செயல்படுத்தும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்தே பணத்தை தங்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பச் சொல்வார்கள். அதை நம்பி பணத்தை அனுப்பியதும் செல்போனை சுவிட்சு ஆஃப் செய்துவிட்டு, அடுத்த மோசடி வேலைக்கு இந்தக் கும்பல் தயாராகி விடும்.

இந்த மோசடி கும்பல் நெட்வொர்க்கில் ஒவ்வொரு வேலையைச் செய்ய டீம், டீமாக ஆட்கள் இருக்கிறார்கள். வங்கிக் கணக்குகளில் பணம் பெறுவது ஒரு டீம் என்றால் மோசடி செய்த பணத்தை ஏ.டி.எம்-கள் மூலம் பணத்தை எடுத்து மோசடி கும்பலிடம் கொடுக்க இன்னொரு டீம் இருக்கும். ஆனால் டீமின் தலைவன் யாரென்று கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு ஏற்ப கமிஷன் மட்டுமே கிடைக்கும். தற்போது நடந்திருக்கும் இந்த மோசடி புகாரில் பணத்தை எடுத்துக் கொடுத்த இருவர் மட்டுமே சிக்கியிருக்கிறார்கள்.

சைபர் கிரைம் மோசடி!

மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்களைத் தேடிவருகிறோம். மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சம் மட்டுமே இருந்தது. அதனால் அந்த வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறோம். மோசடிக் கும்பலின் தலைவன் மற்றும் இந்த நெட்வொரக் குறித்த முழு விவரங்கள் கிடைத்திருப்பதால், விரைவில் அவர்களைக் கைதுசெய்து பணத்தையும் மீட்டுவிடுவோம். டி.பி போட்டோக்களை வைத்து மோசடியில் ஈடுபடும் இந்தக் கும்பலிடம், மக்கள் உஷாராக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற அழைப்புகள் வரும்போது சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.



from Latest news https://ift.tt/SVoucOe

Post a Comment

0 Comments