https://gumlet.vikatan.com/vikatan/2023-06/b3e7e24d-837d-4081-a917-e5fd3d9f8f9e/1.jpgயனயடம ஆசபறற தமழச | கடயரபபல ஏறபடட வரசல| தககள வலயறறம - News in Photos

கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரியில் புதிதாக புனரமைக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்குகளைப் பார்வையிடும் பெண்கள்.
கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி: வளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட மக்கள்.
சென்னை: கண்ணகி நகர் குடியிருப்பில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக, அங்குள்ள குடியிருப்பில் ஏற்பட்ட விரிசலால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
தேனி: சந்தையில் பதினைந்து கிலோ எடைகொண்ட தக்காளிப்பெட்டி, விலையேற்றத்தால் தற்போது 1,200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
விழுப்புரம்: துரிதமாக நடைபெற்றுவரும் விழுப்புரம் - புதுச்சேரி பைபாஸ் சாலை மேம்பாலப் பணிகள்.
விழுப்புரம்: அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் எம்.பி., சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
விழுப்புரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த புனரமைக்கப்பட்ட விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்பு பொருள்களின் முதல் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், முதல்வருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர்.
திருநெல்வெலி: நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, கோயிலிலுள்ள காந்திமதி யானையிடம் ஆசிபெற்றார்.
திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழா ஐந்தாம் நாளையெட்டி சாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
திருநெல்வெலி: பாளையங்கோட்டையில் மத்திய மாவட்ட தி.மு.க., புதிய அலுவலகத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்துவைத்தார்.
திருநெல்வெலி: மத்திய தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர் சந்திப்பு பா.ஜ.க.,மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
வேலூர்: மாவட்டத் திட்டக்குழுக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி: ஊரல் வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மூலம் சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி: ஊடகவியலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர்.அஸ்வனி குமார் பேசினார்.
ஈரோடு: பெரிய சேவூர் பொன்னி நகரிலுள்ள செல்ல மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர்.
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சுதர்சன ஹோமத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
ஈரோடு: தூய்மைப் பணியைத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதைக் கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் அறிமுகக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தஞ்சாவூர்: பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பூட்டுப்போடும் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது.


from Latest news https://ift.tt/vBDw09I

Post a Comment

0 Comments