பல உணவகங்கள் வித்தியாசமான ஆஃபர்களையும், ரூல்ஸ்களையும் அறிமுகப்படுத்தி கவனம் பெறுவதுண்டு. அந்தவகையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உணவகம் ஒன்று மோசமான பெற்றோருக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து கவனம் பெற்றுள்ளது.
அட்லாண்டாவின் ப்ளூ ரிட்ஜ் மலைகளில் அமைந்துள்ள டோக்கோவா ரிவர்சைடு உணவகத்தின் மெனுவில் விதிமுறைகள் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை ரெட்டிட் தள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதில், ``மோசமான பெற்றோருக்கு இந்த உணவகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. பெரியவர்களுக்கான கூடுதல் கட்டணம் எனக் குறிப்பிடப்பட்டு $$$ எனத் தொகையை வெளிப்படுத்தாமல் குறிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் கூச்சலிடும் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாத மோசமான பெற்றோருக்குக் கூடுதல் கட்டணம்.
உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். `நோ பாலிசி நோ சர்வீஸ்’ என்ற கொள்கையைப் பின்பற்றி உணவகம் செயல்படுகிறது.
அதோடு ஆறு பேருக்கு மேல் குழுவாக வருபவர்களுக்கும், பில்களை பிரித்துக் கொள்பவர்களுக்கும், தனித்தனியாக செக் கொடுப்பவர்களுக்கும், பிறந்தநாள் மெனுவில் இருந்து ஆர்டர் செய்பவர்களுக்கும் கட்டண தொகையில் இருந்து 20 சதவிகித தொகை கழிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடிவு செய்தீர்கள் என்றால் மெனுவில் குறிப்பிடப்பட்ட விலைகளுக்கும் மேல் கூடுதலாக 3.5 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

வாங்கிய உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு 3 அமெரிக்க டாலர்கள் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது’’ என்று அந்த மெனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பதிவிட்டுள்ளார்.
இந்த விதிகள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஒருவர் கமென்டில், ``அடங்காத குழந்தைகளுக்கான கட்டணமாக 3 அமெரிக்க டாலர்கள் விதிக்கப்படுகின்றன. நான் இதை ஓர் உணவகத்தின் மெனுவில் படித்தால், அந்த உணவகத்தை விட்டு வெளியேறிவிடுவேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று ரூல்ஸ் போட்டு ரெஸ்டாரன்ட்டில் உங்களிடம் மெனு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?!
from Latest news https://ift.tt/RZpfzLy
0 Comments