https://ift.tt/zeE1rDJ `எல்லாரும் நிறைய தியாகம் பண்ணிருக்கோம்' - அணியின் உதவியாளர்களிடம் கோப்பையைக் கொடுத்த கம்மின்ஸ்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. உலகக்கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்யும் அத்தனை விஷயங்களும் வைராலகிக் கொண்டிருக்கிறது.

உலகக் கோப்பையுடன் அணி உதவியாளர்கள்
அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்களுடைய அணியின் உதவியாளர்களின் கையில் கோப்பையை கொடுத்துவிட்டு அவர்களை போஸ் செய்ய வைத்து போட்டோ எடுத்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Cummins

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3 முக்கியமான கோப்பைகளை ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது. ஆஷஸ் தொடர், கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இப்போது இந்த உலகக்கோப்பை என ஆஸ்திரேலியா முக்கியமாகக் கருதும் அத்தனை தொடர்களிலும் கேப்டனாக முன்நின்று கோப்பையை வென்று கொடுத்து அசத்தியிருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிடித்த கேப்டன்களுள் ஒருவராக மாறியிருக்கிறார் பேட் கம்மின்ஸ். அதிலும் குறிப்பாக நேற்று அந்த உலகக்கோப்பையை வாங்கிவிட்டு வீரர்களுடன் மட்டுமே அதை கொண்டாடாமல் அணியின் ஒரு அங்கமாக இருக்கும் அத்தனை உதவியாளர்களுடனும் அதைக் கொண்டாடினார். உலகக்கோப்பையை அவர்களின் கையிலேயே கொடுத்துவிட்டு அதைத் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணியின் உதவியாளர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவே இருந்தனர். அவர்களையும் தங்களின் மகிழ்வில் இணைத்துக் கொண்டு இதை அனைவருக்குமான கொண்டாட்டமாகவும் மாற்றினார் பேட் கம்மின்ஸ்.

பேட் கம்மின்ஸ்

போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் கம்மின்ஸ் பேசுகையில்,

'ஒரு அணியாக நாங்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட நிறைய தியாகங்களை செய்திருக்கிறோம். குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க முடியாமல் நிறைய நேரம் வெளியவே இருந்திருக்கிறோம். ஆனால், அதெல்லாம் இந்த மாதிரியான தருணத்திற்காக மட்டும்தான். நாங்கள் ஒரு அணியாக பெருமைப்படுகிறோம்.' என கம்மின்ஸ் பேசியிருந்தார்.
Australia

அவர் அணி என குறிப்பிட்டது வீரர்களை மட்டுமல்ல. ஆஸ்திரேலிய ட்ரெஸ்ஸிங் ரூமில் கடைநிலையில் இருக்கும் ஊழியர்களையும் சேர்த்தே குறிப்பிட்டிருக்கிறார்.



from Latest news https://ift.tt/FdPqQRS

Post a Comment

0 Comments