https://ift.tt/NIfnGpv News Live Today: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு... நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு... இன்று விசாரணை!

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/xEIp9oN

Post a Comment

0 Comments