இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த மாதம் தனது நான்கு மாத பேரன் ஏகாகிர ரோஹனுக்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக வழங்கினார். இதன்படி, ஆறு மாத குழந்தையான ஏகாகிர ரோஹனுக்கு 15 லட்சம் இன்ஃபோசிஸ் பங்குகள் கிடைத்துள்ளன. இதன்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ரோஹனுக்கு 0.04% பங்கு இருக்கிறது.
இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் சுமார் 30% உயர்ந்து 7,975 கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் சுமார் 1.3% உயர்ந்து 37,923 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
அதாவது, பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 20 ரூபாய் இறுதி டிவிடெண்ட் மற்றும் சிறப்பு டிவிடெண்டாக 8 ரூபாய் வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பங்குக்கும் மொத்தம் 28 ரூபாய் டிவிடெண்ட் வருமானமாக கிடைக்கும். டிவிடெண்ட் பெறுவதற்கான ரெக்கார்டு தேதி மே 31.
இதன்படி, நாராயண மூர்த்தியின் ஆறு மாத பேரன் ஏகாகிர ரோஹனுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் இருந்து 4.2 கோடி ரூபாய் டிவிடெண்ட் வருமானமாகக் கிடைக்கப்போகிறது.
from Vikatan Latest news https://ift.tt/8kn9yt5
0 Comments