டெல்லியில் நேற்று முந்தினம் மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சனிக்கிழமை மாலை 7 மணியளவில், ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் ( Rau’s IAS Study Circle) அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததாக டெல்லி தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றன. வெள்ளத்தில் மாணவர்கள் சிக்கிய நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவர்களை மீட்படதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியிருந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த மாணவர்கள், ``கட்டடத்தின் அடித்தளத்தில் பயிற்சி மையத்தின் நூலகம் உள்ளது. அங்கு மாணவர்கள் எப்போதும் படிக்க செல்வர். நேற்று திடீரென வெள்ளம் ஏற்பட்டு அடித்தளத்தில் கிட்டத்தட்ட 10-12 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை" எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி,`` கட்டடத்தின் அடித்தளத்தில் மிக வேகமாக வெள்ளம் புகுந்திருக்கிறது. அடித்தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது எப்படி என்று விசாரித்து வருகிறோம். மேலும், இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்கள் தடயவியல் குழுக்கள் இங்கு உள்ளன. தடயவியல் சான்றுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதிலும், உண்மையைக் கண்டறிவதிலும் உறுதியாக உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/RHPczu9
0 Comments