இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி சுல்தான் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
தன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யக்கோரி கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் முருகன்.
முருகனின் மனுவை நீதிபதி சுந்தர் மோகன் தள்ளுபடி செய்து நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தார்.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி முருகன், தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் புகாரளித்திருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப் பரிந்துரை செய்தது.
கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு எதிராக பல்வேறு மனுக்களை அளித்துள்ளார் ஐ.ஜி முருகன்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சூழ்நிலையில் நீதிபதி சுல்தான் முன்னாள் ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
from Vikatan Latest news https://ift.tt/AeI0bBT
0 Comments