https://gumlet.vikatan.com/vikatan/2025-02-16/bbs4xzhb/WhatsApp-Image-2025-02-16-at-10.20.32-PM.jpeg?w=280``துன்புறும் சிறுமிகள் `அப்பா.. அப்பா' எனக் கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கலையா?'' -எடப்பாடி பழனிசாமி

வேலூர் கோட்டை மைதானத்தில், இன்று (பிப்ரவரி-16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசும்போது, `` `அ.தி.மு.க-வின் அறிக்கை பா.ஜ.க-வின் அறிக்கையையொட்டி இருக்கிறது’ என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்தக் காலத்திலும் அ.தி.மு.க யாரையும் நம்பி இல்லை. யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. இது மக்களை நம்பியிருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் நாடியது கிடையாது. எங்களை நாடிதான் அனைவரும் வருவார்கள்.

எடப்பாடி பழனிசாமி

பாலியல் துன்புறுத்தல்...

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியே செல்லும்போது, இளைஞர்கள் தன்னை `அப்பா’ என அழைப்பதாக சொல்லியுள்ளார். குழந்தைகளும், பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது `அப்பா... அப்பா...’ எனக் கதறுகிறார்களே, அந்தச் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா..? என மக்கள் முதல்வரிடம் கேட்கிறார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது `கோ பேக் மோடி’ எனச் சொல்லி கருப்பு பலூன் பறக்கவிட்டார். ஆளும் கட்சியானதும், ஊழல் குற்றச்சாட்டுகளால் பயத்தில், `வெல்கம் மோடி’ எனச் சொல்லி வெள்ளை குடை பிடிக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு `வெள்ளை குடை வேந்தர்’ எனப் பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்.

`வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி..'

தங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சியும் ஒரே கொள்கை கொண்ட கட்சி என்கிறார் ஸ்டாலின். பிறகு எதற்கு தனித்தனி கட்சி? அனைத்துக் கட்சியையும் ஒன்றிணைத்துவிடலாமே?. அதே அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. அதிகாரத்திற்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க.

வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அமைப்போம். அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும். நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்கிறார்கள். உங்கள் கோரிக்கை ஏற்று வெற்றிக் கூட்டணி அமைப்போம்.

வேலூர் மண்டல மாநாடு

தி.மு.க கொள்கை

தி.மு.க-வுக்கு என்ன கொள்கை இருக்கிறது..? 1999 பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போது முரசொலி மாறன் நினைவிழந்திருந்த சமயத்தில் ஓராண்டு காலம் அவர் இலக்கா இல்லாத அமைச்சராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டு காலம் முடிந்ததும், அப்படியே அந்தர்பல்டி அடித்து காங்கிரஸுடன் கூட்டணி. எனவே, எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.

தமிழ்நாடு பொறுத்தவரை இருமொழி கொள்கைதான்

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மறுக்கிறது. மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களை பாருங்கள். ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். `மும்மொழி கொள்கை ஏற்க வேண்டும்’ என மத்திய அரசு சொல்வது சரியல்ல. தமிழ்நாடு பொறுத்தவரை இருமொழி கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்” என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/KeDfm4L

Post a Comment

0 Comments