திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேட்மிட்டன் விளையாட்டு மைதானத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரை, சீனிவாசன் நாடியுள்ளார். அப்போது, சந்திரசேகர் சீனிவாசனிடம், ”மின் இணைப்பு கொடுப்பதற்காக எனக்கு ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆலோசனைப்படி சீனிவாசன், சந்திரசேகரனிடம் ரூபாய் 10,000 -த்தை லஞ்சமாக கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட சந்திரசேகர் தன்னுடைய உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் அந்த பணத்தை கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இதனை அடுத்து அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/ryp2n9Z
0 Comments