https://gumlet.vikatan.com/vikatan/2025-04-13/qpvac3qk/JV-Cover-Pic-7.jpg?w=280துலாம்: தொட்டது துலங்கும்; செய்யவே கூடாத ஒன்று இதுதான் - எப்படியிருக்கிறது பலன்?

தெய்வத்தின் துணையைப் பெற்றவர்; தவறுகளைத் தட்டிக் கேட்பதில் பாரபட்சம் பார்க்காதவர் நீங்கள். உங்கள் ராசியிலேயே விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.

1. சுக்கிரனின் ஆதிக்கத்தில் வருவது துலாம் ராசி. ஆகவே, இந்த ராசிக்காரர்கள், பெருஞ் செல்வத்தை விரும்புவீர்கள். அதற்கேற்ப, பொருள் வரவு தருவதாக இந்தப் புத்தாண்டு அமையும் எனலாம். உங்கள் ராசியிலேயே இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. பல விஷயங்களுக்கும் நீங்களே தலைமை தாங்கும் சூழல் உண்டாகும்.

2 உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதையும் அலசி ஆராயும் மனப்பான்மை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வட்டிக் கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.

துலாம்

3. எனினும், எதிலும் அவசர முடிவுகள் எடுக்கக்கூடாது. பேச்சில் பொறுமை அவசியம். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

4. இந்த வருடம் ஏப்ரலில், கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் அமரும் நிலையில், வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

5. வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். குடும்ப வருமானத்தை உயர்த்தக் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். வழக்கமான பணியுடன், வேறு சொந்தத் தொழிலிலும் கவனம் செலுத்துவீர்கள்.

6. ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் ராகு 5-ல் அமரவுள்ளார். பொதுவாக ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல என்றாலும், ஓரளவு நல்லதையே செய்வார் என எதிர்பார்க்கலாம். இந்தக் காலக்கட்டத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

7. வண்டி - வாகனச் சேர்க்கைகள் ஏற்படும். மனைவி நெடு நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். எனினும், கணவன்-மனைவிக்குள் தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்ப்பது அவசியம்.

8. இந்த வருடம் மே-11 அன்று நிகழப்போகும் குருப்பெயர்ச்சி இவர்களுக்கு மேன்மையான பலன்களை வாரி வழங்கப்போகிறது. ஒன்பதாம் இடத்தில் குரு, அனைத்துவிதமான புண்ணிய பலன் களையும் அருளப்போகிறார். சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் நிலை உருவாகும்.

துலாம்

9. இவர்களின் எண்ணம், சொல், செயல் யாவற்றுக்கும் மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் எல்லோரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். நீங்கள் தொட்டது துலங்கும்; எடுத்த காரியம் ஜெயமாகும். தடைகள் விலகும். எதிர்த்தவர்களும் அடங்கிப்போவார்கள்.

10. அத்தியாவசியமான விஷயங்களில் துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும்.

11. பிள்ளைகளின் வருங்காலம் கருதிக் கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம்.

12. நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். வி.ஐ.பிகளின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. எனினும், அவ்வப்போது மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும்.

13. குரு பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்து வந்த போராட்ட நிலை மாறும். பெரிய முதலீடுகளைப் போட்டுப் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். அனுபவசாலிகளை பணியில் அமர்த்துவீர்கள்.

14. உத்தியோகத்தில், வெகு நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இனி தேடி வரும். அதிகாரிகளின் பாராட்டும், ஆதரவும் மன மகிழ்ச்சியைத் தரும்.

15. ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். அபிராமி அந்தாதி படித்து வழிபடலாம். ஒருமுறை, குடும்பத்துடன் சென்று மதுரை மீனாட்சியம்மனை வழிபட்டு வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.



from Vikatan Latest news https://ift.tt/x67cHab

Post a Comment

0 Comments