https://ift.tt/04tdTgU Contest: அமெரிக்கா என்றாலே வானுயர கட்டிடங்கள் மட்டும்தானா? - வெளிர் நீல கடல் பற்றி தெரியுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அனைவருக்கும் வணக்கம், நானும் பலரை போல "LIVING THE AMERICAN DREAM" என்ற மிக பிரபலமான வரிகளை எனதாக்கிக்கொள்ள அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவன்.

சிறு வயதிலிருந்தே அமெரிக்கா என்றால் உயரமான நியூயார்கின் கட்டிடங்கள், காலிஃபோர்னியாவின் தலை சிறந்த நிறுவனங்கள் என்றே நான் பார்த்தும் படித்தும் இருக்கிறேன்.

நம்மில் பலரும் அப்படித்தான் என எண்ணுகிறேன். ஆனால், அமெரிக்காவில் அது தவிர பல அரிய இயற்கை சூழல் நிறைந்த இடங்கள் பல உண்டு. அதில் நான் மிகவும் விரும்பி செல்லும் ஒரு அழகிய கடற்கரை நகரமான டாம்பா பற்றி வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ளவே இந்த கட்டுரை.

Tampa Convention Center

டாம்பா, இன்றைய அமெரிக்க வளைகுடா, முந்தைய மெக்ஸிக்க வளைகுடாவில் அமைந்திருக்கும் ஒரு அழகிய நகரம். பெயர்மாற்றத்திற்கான காரணம் யாரென்று நம்மில் பலருக்கு தெரியும், அது வேற கதை.

இந்த நகரத்தின் சிறப்பு யாதெனில் கடல் தான். கடலில் என்ன சிறப்பு? என்கிறீர்களா? நாம் இந்தியாவில் பார்க்கும் பெரும்பாலான கடற்கரைகளில் கடலின் நீர் கருநீல நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த அமெரிக்க வளைகுடா கடல் வெளிர் நீலத்தில் தென்படும்.

கடலின் அடியில் உள்ள மணல் கண்களில் தெரியும். டாம்பாவின் கடற்கரை பெயரே கிளியர்வாட்டர் கடற்கரை தான். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கக்கூடிய கடற்கரை அது. கடற்கரையின் மணலோ வெள்ளை நிறத்தில் கண்ணில் பளிச்சென்று மிளிரும். நீங்கள் இயற்கை, கடல் போன்ற இடங்களுக்கு செல்ல விரும்புவோர் என்றால் டாம்பா ஒரு சிறந்த சுற்றுலா தளம்.

கிளியர்வாட்டர் கடற்கரையில் பற்பல விளையாட்டுக்கள் உள்ளன. ஜெட்ஸ்கி எனப்படும் தண்ணீரில் செல்லும் வாகனம் அங்கு வாடகைக்கு கிடைக்கும். ஜெட்ஸ்கி மிகவும் வேகமாக செல்லக்கூடிய வாகனம். அதில் தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறிப்பாயும் அந்த அனுபவமே அலாதியானது.

அமெரிக்க கடற்கரை நகரம் செல்வீர்களே ஆனால் தவறாமல் ஜெட்ஸ்கியை ஒரு முறையாவது ஓட்டிப்பார்த்துவிடுங்கள். அடுத்ததாக, பாராசைலிங். கடலில் சிறிது தூரம் சென்று பாராசூட்டில் மேலே பறக்கவிடுவார்கள்.

200 முதல் 300 அடி உயரத்தில் இருந்து அந்த வெளிர் நீல கடைக்கரையை பார்ப்பது போல ஒரு காட்சி வேறு எங்கும் கிடைக்காது. அப்படி ஒரு இயற்கை அழகு.

Unsplash

இது போன்ற கடல் விளையாட்டுகளை முடித்துவிட்டு கரைக்கு வந்தால், அங்கு பல வகையான கடல் உணவுகளை பரிமாறும் உள்ளூர் உணவகங்கள்.

மீன்கள், இறால்கள், நண்டுகளில் தொடங்கி நத்தை வரை பலதரப்பட்ட உணவுகள். சுவை நமது இந்திய உணவுகளை போல காரசாரமாக இல்லாவிட்டாலும் புதுமையாக இருக்கும்.

தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற தீவு டாம்பாவில் உள்ள ஹனிமூன் தீவு. பெயருக்கு ஏற்றார்போல கூட்டநெரிசல் இல்லாத தனிமையான இனிமையான தீவு இந்த ஹனிமூன் தீவு. இத்தீவினுள் செல்ல $5 நுழைவுக்கட்டணமும் உண்டு.

இந்த இரண்டு இடங்களையும் பார்த்தபிறகு சிறிது ஓய்வு எடுத்துவிட்டு இரவு கேளிக்கைகளுக்கு தயாராகலாம். புளோரிடா மாகாணமே இரவு நேர கேளிக்கைகளுக்கு பெயர்போன ஒன்று. அதிலும் டாம்பா மற்றும் மியாமி ஆகிய நகரங்கள் இரவில் சிறப்பாக செயல்படக்கூடியவை. இரவு நேர கேளிக்கைவிடுதிகள் உணவகங்கள் பல வண்ண விளக்குகள் என டாம்பா நகரமே மின்னொளியில் மூழ்கித்திளைக்கும்.

குறிப்பாக டாம்பாவின் டௌன்டவுன் எனப்படும் முக்கிய நகரின் நடுவே டாம்பா ரிவர்வாக் எனும் இடம் இரவில் மிக அழகாக காட்சியளிக்கும். பின்னர், அங்கு இருந்து டிராம் மூலம் பழமையான நகரின் ஒரு பகுதியான ybor நகருக்கு செல்லலாம். அந்த ட்ராமின் வடிவமே பழமையை உணர்த்துவது போல இருக்கும் மேலும் அது முற்றிலும் இலவசம். ybor நகரில் பல இரவு உணவு விடுதிகளும் வண்ண விளக்குகளும் என ஜெகஜோதியாக இரவை கழிக்கலாம் .

இரண்டாம் நாள் டாம்பாவில் இருந்து 50 - 60 மைல் தொலைவில் உள்ள சரசோட்டா கடற்கரைக்கு செல்லலாம். அந்நகருக்கு செல்லும் வழியில் ஒரு அழகிய வானுயர நிற்கும் பாலம், மறக்காமல் அந்த பாலத்தின் அருகில் ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும்.

சரசோட்டா ஒரு சிறிய கடற்கரை கிராமம், மிகவும் அமைதியாகவும் அழகாகவும் இருக்கும். ஒரு நாள் எந்த ஒரு வாகன சத்தமும் இல்லாமல், நகரத்தின் பரபரப்பு இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் சரசோட்டா கடற்கரை ஒரு சிறந்த இடம்.

பின்னர், டாம்பாவில் உள்ள புஷ் கார்டன் தீம் பார்க் மிகவும் பிரபலம். நமது ஊரில் இருக்கும் தீம் பார்க்குகளை போல இரண்டு மூன்று மடங்கு பெரியது மற்றும் பல விளையாட்டுக்களை உள்ளடக்கியது. குழந்தைகளுடன் செல்ல ஒரு சிறந்த இடம்.

மொத்த இடத்தையும் பார்க்க ஒரு முழு நாள் தேவை. ஒரு வார இறுதிக்கு சற்று ஓய்வாக பொழுதை கழிக்க சிறந்த இடம் டாம்பா புளோரிடா.

பிளோரிடாவின் மற்றுமொரு சிறப்பு யாதெனில், வருடம் முழுவதும் சிறப்பான கால நிலை கொண்ட மாகாணம். கடுங்குளிர் என்ற நிலையே கிடையாது. எனவே அமெரிக்கர்கள் பலர் வடக்கில் இருந்து குளிர் காலங்களில் பிளோரிடாவை நோக்கி படை எடுப்பர். கோடை காலத்தில் சென்னையை போல சூரியன் சுட்டெரிக்கும். டாம்பா செல்ல சிறந்த மாதங்கள் மார்ச் முதல் மே வரை எனலாம்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



from Vikatan Latest news https://ift.tt/rn4vR69

Post a Comment

0 Comments