மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், , "ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள், வணிகர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஆச்சர்யம் அளிக்கிறது.
இதை பாஜக எடுத்து வந்தது போல் பேசுகின்றனர். 1952-ம் ஆண்டில் தொடங்கி 2005-ம் ஆண்டு வரை 13 முறை எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுள்ளது. இதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். என்ன சொல்கிறோம் என்று புரியாமல் பேசுகிறார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாகவும் இதை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது நம் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுக இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது இதை ஏன் எதிர்க்கவில்லை. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஒரே பெயரில் 3 வாக்காளர் அட்டை வைத்துள்ளனர். இதையெல்லாம் வைத்துதான் நீங்கள் வெற்றி பெற்றீர்களா. திமுக தங்களின் தவறை மறைப்பதற்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இந்திய அரசியலமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி ஹரியானாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை பலமிழக்க வைக்காதீர்கள். டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. ஓட்டுரிமை யாருக்கும் போகாது.
அனைத்து ஆவணங்களுக்கும் மாற்று ஆவணங்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கே பி.எல்.ஓ வருவார். கிராம மக்கள் அலைய வேண்டியதில்லை.
from Vikatan Latest news https://ift.tt/Cteg8LB
0 Comments