ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். அப்பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அப்பெண்ணிடம் நாங்கள் உங்களை பத்திரமாக வீட்டில் விட்டு விடுகிறோம் என்று காரில் இருந்த இரண்டு பேரும் தெரிவித்தனர். அவர்களின் வார்த்தையை நம்பி அப்பெண் காரில் ஏறினார். ஆனால் கார் கிளம்பிய சிறிது நேரத்தில் அப்பெண்ணின் வீட்டை நோக்கி செல்வதற்கு பதில் குர்காவ் நோக்கி சென்றது.

இது குறித்து அப்பெண் கேட்டதற்கு அவரை காரில் இருந்தவர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இரண்டரை மணி நேரம் ஓடும் காரில் அப்பெண்ணை அக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை 3 மணிக்கு அக்கும்பல் அப்பெண்ணை ஓடும் காரில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். இதில் அப்பெண்ணிற்கு முகத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவர்கள் ஓடி வந்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். '
அவரது முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு 12 தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயாருடன் வருகிறார். சம்பவத்தன்று இரவு அப்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். இது தொடர்பாக தனது சகோதரிக்கு போன் செய்து 3 மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். போலீஸார் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அதோடு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/W8Z54BH
0 Comments