https://ift.tt/08bGufr மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சரவணன் புகார்

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் இறந்தவர்கள் உட்பட 42 பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று முன்னாள் எம்.எல்.ஏ-வும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் சரவணன் புகார் எழுப்பியுள்ளார்.

தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்த டாகடர் சரவணன்
தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்த டாகடர் சரவணன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், "இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி மதுரை மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்தபோது மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் 844 பேர் வரைவு பட்டியலில் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஆளுங்கட்சியின் தூண்டுதலால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் திட்டமிட்டு மரணமடைந்த 29 பேரின் பெயர்களும், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 12 பேரின் பெயர்களும், ஒரு இரட்டைப் பதிவு என 42 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

இந்தப் பதிவுகளை நீக்கவும், தவறு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிய ஆவணங்களுடன் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்ப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற மோசடிகளைச் செய்து, தேர்தலில் வெற்றி பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது.

திமுக அரசின் மோசமான நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மகளிர், மாணவர் எனப் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த முறை திமுகவுக்குப் பாடம் புகட்டுவது உறுதி" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/HvTYEeO

Post a Comment

0 Comments