https://ift.tt/3kRGezh vs SA: ஸ்லோ பால் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்கா; சறுக்கிய இந்திய அணி!

இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது.

இன்று மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை பிரேவிஸ் – மில்லர் பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அதிரடியான ஆட்டங்களை விளையாட, 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ind vs sa match
ind vs sa match

இதில் அதிகபட்சமாக பிரேவிஸ் (45), மில்லர் (63), ஸ்டப்ப்ஸ் (44) ரன்கள் எடுத்தனர். இந்தியாவிற்காக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணியின் பேட்டிங் வரிசையை தென்னாப்பிரிக்க அணி ‘ஸ்லோ பால்’ என்ற ஆயுதத்தால் ஆரம்பத்திலேயே சிதைத்தது.

பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இந்திய அணி தடுமாற, தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்கள் பெரும்பாலும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அந்த சூழலில் பொறுமையாக விளையாடிய சிவம் துபே 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதன்பின் களமிறங்கிய மற்ற ஆட்டக்காரர்களும் தொடர்ச்சியாக அவுட் ஆக, இந்திய அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இருந்த இந்தியா, இந்த போட்டியின் மூலம் டி20 வரலாற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இதுவரை இல்லாத மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

ind vs sa match
ind vs sa match

மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. மறுபுறம், இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாக சூப்பர் 8-இன் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்க அணி.



from Vikatan Latest news https://ift.tt/YKOXD2h

Post a Comment

0 Comments