https://ift.tt/baMYViP ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக 10 டிப்ஸ்' - தொழில் முனைவோருக்கான சக்சஸ் ஃபார்முலா!

சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம் என்பதைத் தாண்டி, பணத்தைப் பற்றிய கவலையின்றி சுதந்திரமாக இருப்பதே ஒவ்வொரு தொழில்முனைவோரின் கனவு.

இந்த நிதிச் சுதந்திரத்தை 10 ஆண்டுகளில் எட்டுவது சாத்தியமா? நிச்சயமாகச் சாத்தியம்! ஆனால், வெறும் மோட்டிவேஷனைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மட்டும் அது நடந்துவிடாது.

இன்றைய உலகில் சுயமுயற்சியால் முன்னேறும் தொழில்முனைவோர்கள் மிக வேகமாக கோடீஸ்வரர்களாக மாறி வருகிறார்கள்.

இவர்கள் அதிகம் சம்பாதித்ததால் மட்டும் பணக்காரர்கள் ஆகவில்லை; பணத்தை அவர்கள் கையாளும் விதமே அவர்களை உயர்த்தியுள்ளது.

நீங்களும் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? அதற்கான 10 சூத்திரங்கள் இதோ:

முதலில் பணப்புழக்கம்

உங்களுக்குப் பிடித்த தொழிலைச் செய்வது நல்லது. இருப்பினும், தொடர்ந்து லாபம் தரக்கூடிய, பணப்புழக்கம் (Cash flow) உள்ள தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அத்தியாவசியம். டிமாண்ட் இருந்தால் சப்ளை தன்னாலே நடக்கும்! இதுவே உங்கள் பிசினஸுக்கான ஆக்ஸிஜன்.

வருமானத்தை அதிகரிப்பதே குறிக்கோள்

முதல் 5 ஆண்டுகளில் வருமானத்தை எப்படியெல்லாம் உயர்த்துவது என யோசியுங்கள். ₹8 லட்சம் சம்பாதித்து சிக்கனமாக வாழ்வதைவிட, ₹25 லட்சம் சம்பாதித்து முதலீடு செய்பவரே வேகமாக பணக்காரர் ஆவார்.

பணத்தை ஈட்டும் புதிய வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடிப்பதும், அதனைச் செயல்படுத்துவதே உங்களின் இரட்டைக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள்

வருமானம் அதிகரித்ததும் பெரிய கார், புது ஆபீஸ் என EMI-யில் ஆடம்பரச் செலவுகளில் இறங்காதீர்கள். இது உங்கள் நிதி வளர்ச்சியைத் தடுத்துவிடும். ₹20 லட்சம் மதிப்புள்ள கார் சில நொடிகள் கெத்து காட்டும்; ஆனால், அதே ₹20 லட்சம் முதலீடு உங்கள் தலைமுறையையே மாற்றும். நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுக்கவும் துணை புரியும்.

விற்பனை கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்

விற்பனை (Sales) என்பது ஏமாற்று வேலை அல்ல; அது ஒருவரின் பிரச்னைக்கான தீர்வைத் தருவது. சிறந்த பிசினஸ்மேன்கள் தங்களின் வாடிக்கையாளருடன் தொடர்ந்து இணைப்பிலேயே இருப்பார்கள். தொடர்ந்து அவர்களின் பிரச்னைகளைத் தங்களின் தயாரிப்பு மற்றும் சேவைகள் மூலம் தீர்க்க முனைவார்கள். இதைச் சிறப்பாகச் செய்தால், நீங்களே வெற்றியாளர்!

சிஸ்டத்தை உருவாக்குங்கள்

நீங்கள் ஒரு வாரம் விடுப்பு எடுத்தால் உங்கள் பிசினஸ் முடங்கிப்போனால், அது பிசினஸ் அல்ல, அது ஒரு வேலை! ஆட்டோமேஷன் மற்றும் சரியான பணியாளர்கள் மூலம் உங்களுக்கான ஒரு சிஸ்டத்தை உருவாக்குங்கள்.

பிசினஸ்

நல்ல நெட்வொர்க் அவசியம்

உங்கள் நண்பர்கள் வட்டமே உங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. முதலீட்டாளர்கள், விற்பனை நிபுணர்கள், வெற்றிபெற்ற தொழில்முனைவோர் என உங்களைவிட அறிவாளிகளுடன் பழகுங்கள்.

சொத்துகளை உருவாக்குங்கள்

நீங்கள் வேலை செய்தால் மட்டுமே பணம் வரும் என்ற நிலையை மாற்றுங்கள். மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட், பங்குகள் எனத் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய சொத்துகளை (Assets) விடாமல் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். பணம் என்பது வெறும் காகிதம். அதன் மூலம் சொத்துகளைத் தொடர்ந்து உருவாக்குவதே விரைவில் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் ரகசியம்!

தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்

'தொழில் நன்றாக நடக்கும்போது மட்டும்தான் முதலீடு செய்வேன்', என்ற எண்ணத்தை விடுங்கள். மாதாமாதம் SIP முறையில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். கூட்டுவட்டியின் சக்தி ஏதோ மேஜிக் அல்ல, அது கணிதம்! உதாரணமாக, மாதாமாதம் ₹1 லட்சத்தை 12% வருமானத்தில் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், பத்தாண்டுகளின் முடிவில் உங்கள் முதலீடு சுமார் ₹2.3 கோடியாக உயர்ந்திருக்கும். இதுதான் தொடர் முதலீட்டின் சக்தி!

ரிஸ்க்கை நிர்வகியுங்கள்

பத்து வருட உழைப்பை ஒரே ஒரு தவறான முடிவு அழித்துவிடும். மருத்துவக் காப்பீடு, டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் அவசரகால நிதி (Emergency fund) ஆகியவற்றை எப்போதும் கையில் வைத்திருங்கள்.

நீண்டகால சிந்தனை தேவை

பிசினஸ்ஸோ முதலீடோ, முதல் சில ஆண்டுகள் வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும். ஆனால், பொறுமையுடன் தொடர்ந்து செயல்பட்டால், கூட்டு வளர்ச்சி (Power of Compounding) மூலம் அபரிமிதமான லாபத்தைப் பார்க்க முடியும். பொறுமைதான் முதலீட்டின் முதல் தகுதி.

உண்மையான செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல; அது உங்களுக்குத் தரும் சுதந்திரமும், வாழ்க்கைக்கான தேர்வுகளும்தான்!

அடுத்த 10 ஆண்டுகள் எப்படியும் கடந்துபோகும். அதை வெறும் செலவுகளில் கழிக்கப் போகிறீர்களா அல்லது முதலீடு செய்து செல்வத்தை உருவாக்கப் போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்!

  • பிசினஸ் & வாழ்க்கையில் செல்வத்தை சேர்ப்பது எப்படி?

  • சேர்த்த செல்வத்தை நிர்வகிப்பது எப்படி?

  • பிசினஸ் ஓனர்ஸ் செய்யும் நிதி தவறுகள் என்னென்ன, அதனை எவ்வாறு சரி செய்யலாம்?

  • செல்வத்தைக் காக்கும் வழிமுறைகள்.

Labham Workshop May 27 2026

நிதிச் சுதந்திரம் அடைவது எப்படி? பிசினஸ் ஓனர்களுக்கான நிதி திட்டமிடல் வழிகாட்டல் ஆன்லைன் ஒர்க் ஷாப்

இவை அனைத்தையும் அறிந்துகொள்ள, மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும், தொழில்முனைவோருக்கான ஆன்லைன் நிதி வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

சத்சங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சிவராம் காளியப்பன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.

வரும் மே 27 (புதன்) மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இது தொழில்முனைவோருக்கே மட்டுமே (பிசினஸ் ஓனர் அல்லாதோர் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்).

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-may27-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may27_2026



from Vikatan Latest news https://ift.tt/KwvYnx5

Post a Comment

0 Comments