https://ift.tt/bHRgKdz Vikatan: ஆஸ்பிரின் அலர்ஜி உள்ள இதய நோயாளிகளுக்கு மாற்று மருந்து உண்டா?

Doctor Vikatan:  ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் குளோபிடோக்ரல் (Clopidogrel) மாத்திரைகள் இரண்டிற்கும் ஒவ்வாமை (Allergy) உள்ள நோயாளிகளுக்கு மாற்று மருந்துகள் என்ன?

-m.mohamed Rafic, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் குளோபிடோக்ரல் (Clopidogrel) ஆகிய இரண்டு முக்கிய ரத்த உறைதல் தடுப்பு மருந்துகளுக்கும் (Antiplatelet drugs) ஒரே நேரத்தில் ஒவ்வாமை (Allergy) இருப்பது மிகவும் அரிதான ஒரு நிலை. எனவே, அது குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அரிதினும் அரிதாக ஒருவருக்கு அந்த ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு மாற்று மருந்துகள் உள்ளன. 

இதயத் தமனி நோய் (Coronary Artery Disease), பக்கவாதம் (Stroke) அல்லது ஸ்டென்ட் (Stent) வைக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்க இந்த மருந்துகள் அத்தியாவசியமானவை. இவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் மருத்துவர் கீழ்க்காணும் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அது சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நலம், வயது, இதயநோய் பாதிப்பின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.

டிகாக்ரிலர் (Ticagrelor) அல்லது பிராசுக்ரல் (Prasugrel): 

இவை குளோபிடோக்ரல் போலவே செயல்படும் மருந்துகள் என்றாலும், அவற்றின் வேதி அமைப்பு (Chemical structure) மாறுபட்டது. குறிப்பாக, டிகாக்ரிலர் மருந்து குளோபிடோக்ரலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதால், இதற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

தமனிகளில் ரத்தம் உறைவதைத் தடுக்க, இது சில நேரங்களில் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிலோஸ்டாசோல் (Cilostazol):

இது ஆஸ்பிரின் அல்லது குளோபிடோக்ரல் குடும்பத்தைச் சாராத  தனித்துவமான ஒரு மருந்து (PDE3 inhibitor). தமனிகளில் ரத்தம் உறைவதைத் தடுக்க, இது சில நேரங்களில் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர, தேவையைப் பொறுத்து டிக்ளோபிடின் ( Ticlopidine)  என்ற இன்னொரு மாற்று மருந்தையும் மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே, மருந்து ஒவ்வாமை இருப்பதாக உணர்ந்தால், நீங்களாக எந்த முடிவுக்கும் வராமல், மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.

 உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news https://ift.tt/JGFAXYb

Post a Comment

0 Comments