https://gumlet.vikatan.com/vikatan/2026-08-18/2bi1geuw/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.webp?w=280"ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை" - முதன்முறையாக ட்ரம்ப் பேச்சு

‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு மேல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்... சுமூகமாகப் பேச்சுவார்த்தை இருக்கிறது... அதோ... இதோ...’ என்று தொடர்ந்து கூறியும், பதிவிட்டும் வந்தார்.

ஆனால், கடந்த ஒரு வாரமாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன்... ஈரான் வெள்ளைக்கொடி காட்ட வேண்டும்; இல்லையென்றால், அவ்வளவுதான் என்று ட்ரம்ப் கடுமையாகச் சாடி வருகிறார்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில், முதன்முறையாக ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று ட்ரம்பே தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

“ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ உரையாடலோ நடைபெறவில்லை.

அதற்கானத் திட்டமும் எதுவும் இல்லை. கடற்படை முற்றுகை முழு வீச்சிலும் அமலிலும் உள்ளது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

நீரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகுண்டுகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன.” என அவர் பதிவிட்டுள்ளார்.



from Vikatan Latest news https://ift.tt/KXHgGwf

Post a Comment

0 Comments