https://gumlet.assettype.com/vikatan/2020-08/e24d103f-08a1-4fe0-bfa2-4cb74bec9cf9/vikatan_2020_08_a4c7cf73_f299_417f_9cc8_c2bb976f2186_Chennai_lock_new_1.jpgஏப்ரல் 6-ம் தேதிக்குப் பிறகு லாக்டெளனா? - உண்மை நிலவரம் என்ன?

கொரோனா பரவல் தீவிரமானதை அடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சாலைகள் வெறிச்சோடியதையும், மக்கள் நடமாட்டம் அறவே இல்லாமல் சுமார் 7 மாதங்கள் வீட்டுக்குள் முடங்கியதையும் முதல்முறையாக பார்க்க நேர்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் கூடியது. ஒருவழியாக கொரோனா தாக்கம் படிப்படியாகக் குறைந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருந்து நிலைமை சீராகத் தொடங்கியது.

ஊரடங்கு

இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. அது மெல்ல மெல்ல இந்தியாவிற்குள்ளும் ஊடுருவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. சமீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே மக்கள் மத்தியில் மீண்டும் லாக்டெளன் வருமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி மீண்டும் லாக்டெளன் அமல்படுத்தினால் வேலை, வாழ்வாதாரம் என்னாகும் என்பது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தநிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து, மே மாதம் 2-ம் தேதி, 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்பட இருக்கின்றன. சுமார் ஒரு மாத கால இடைவெளியில் அரசு லாக்டெளனை அமல்படுத்தப்போகிறது என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.

Also Read: `தடுப்பூசிக்காகவா, தேர்தலுக்காகவா?' - அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையும் சர்ச்சைகளும்!

அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். `` லாக்டெளன் அறிவிக்க அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக அரசு காபந்து அரசாக மாறிவிட்டது. அதாவது, பல் இல்லாத பாம்பு போல. அத்தனை அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். இங்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தல் நடக்கும் கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமிலும் இதே நிலைதான். அதனால், தமிழக அரசோ, முதல்வரோ தளர்வில்லாத ஊரடங்கினை அமல்படுத்த முடியாது. எனினும், மத்திய அரசுக்கு லாக்டெளன் அறிவிக்க அதிகாரம் உள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதியோடு தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிகிறது. ஆனால் அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஏப்ரல் இறுதிவரை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதனால், ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மட்டும் லாக்டெளன் அறிவிக்க முடியாது. ஒட்டுமொத்தமாகவும் ஏப்ரல் 6-க்குப் பிறகு ஊரடங்கு அமல்படுத்த முடியாது. ஏனெனில், அந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு மாநிலத்தில் தேர்தல் நடந்தாக வேண்டும்.

நான்கு மாநில வாக்குப்பதிவும் முடிந்து, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, ஐந்து மாநிலங்களிலும் புதிதாக பொறுப்பேற்கும் அரசு வேண்டுமானால் ஊரடங்கினை அமல்படுத்தலாம். அல்லது மத்திய அரசே மே 2-ம் தேதிக்கு பிறகு லாக்டெளன் அமல்படுத்தலாமே தவிர, ஏப்ரல் 6-க்கும் மே 2-க்கும் இடையே ஊரடங்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று!” என்றனர்.



from Latest News https://ift.tt/3tPDYSK

Post a Comment

0 Comments