https://gumlet.assettype.com/vikatan/2021-04/22ec9fa2-4f98-4d6e-a785-0a72c4549ca7/paramathi_velur_2.jpgநாமக்கல்: மாஸ்க் அணியாத பெண்; சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் - போலீஸ் வழக்குப் பதிவு

மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணுக்கு அபராதம் விதித்த சுகாதார ஆய்வாளரை, அந்த பெண்ணும், கணவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமத்தி வேலூர்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து பொத்தனூர் செல்லும் சாலையில் சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். முகக்கவசம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியினையும் மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த, தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரியா முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக ரூ. 200 அபராதம் விதித்துள்ளனர்.

Also Read: நாமக்கல்: `அதிமுக ஓட்டுக்குப் பணம் தரலை!’ - சாலைமறியல் செய்த மக்களால் போலீஸார் அதிர்ச்சி

ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியிருக்கிறார். இதனால் அதிகாரிகள், 'பணம் இல்லையென்றால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்' என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால், பிரியா அருகிலுள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துவந்து தருவதாகக் கூறி, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் புகழூர் சர்க்கரை ஆலையில் ஓப்பந்ததாரராக உள்ள தனது கணவர் ஈஸ்வரனுக்கு தகவல் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறார் பிரியா. மனைவி சொன்ன தகவலின் அடிப்படையில், உடனடியாக தனது நண்பர்கள் மூன்று பேருடன் அங்கு வந்த ஈஸ்வரன், பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

பரமத்தி வேலூர்

சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமாரை, தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியான சுகாதாரத்துறையினர், பரமத்தி வேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், ஈஸ்வரனை கைது செய்தனர். அதோடு, அங்கிருந்து தப்பி தலைமறைவான பிரியா உள்பட தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தனபால், கவியரசு, கதிர்வேல் ஆகிய நான்கு பேரை தேடிவருகின்றனர். மேலும், இது குறித்து தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Latest News https://ift.tt/3d5dkQm

Post a Comment

0 Comments