https://gumlet.assettype.com/vikatan/2021-03/5c76fa09-985b-4c27-b790-bf1c3d8ce33c/mu3.jpgகுளோபல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? - பதில் கூறும் நாணயம் விகடன் வெபினார்

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் `குளோபல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூலை 4-ம் தேதி காலை 10.30 to 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

mutual fund

Also Read: 19 வயதில் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்..! எப்படி முடிந்தது..?

இதில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய : https://bit.ly/NV-ICICIPru

பொதுவாக, உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் எப்போதும் ஒரேமாதிரி செயல்படுவதில்லை. அந்த வகையில் பங்கு முதலீட்டில் ரிஸ்கை குறைக்க சர்வதேச நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் அமைந்ததுதான் குளோபல் ஃபண்டுகள். இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதியின் பெரும்பகுதி சர்வதேச நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

அண்மைக் காலங்களில் சர்வதேச பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. இவை கொரோனாவுக்குப் பிறகான காலத்தில் வருமானம் கொடுக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

குளோபல் மியூச்சுவல் ஃபண்ட் வெபினார்

Also Read: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் வருமான வரி கணக்கீடும்! முழுமையான கையேடு...

இந்நிலையில் குளோபல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே குளோபல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்கள், செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பலன் பெறலாம்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru



from Latest News https://ift.tt/3jnE2HE

Post a Comment

0 Comments