https://gumlet.assettype.com/vikatan/2021-08/9d792a5f-1bc1-4d01-8503-8edb5994a3ff/IMG_20210826_WA0042.jpgகுழந்தைகளை கொன்று தற்கொலை செய்த நேபாள நாட்டு பெண்?! - கோவை அதிர்ச்சி

நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் ஆதித்ய பண்டாரி. இவர் கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே குப்பனூர் பகுதியில் உள்ள ஓர் தோட்டத்தில் தங்கி பண்ணை வேலை செய்து வருகிறார். இவருக்கும் தன்கலா என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆதித்ய பண்டாரி

Also Read: ஒருமுறை கடந்தால் 3 மடங்கு கட்டணம்! - கோவை எல் அண்ட் டி சுங்கச்சாவடி சர்ச்சை

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்கலா மற்றும் குழந்தைகள் சில மாதங்களுக்கு முன்புதான் அங்கு வந்ததாகவும், தன்கலாவும் பண்ணை வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த வேலை பிடிக்காததால் இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆதித்ய பண்டாரி நேற்று பணிக்கு சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து தன்கலாவை அழைத்துள்ளார்.

சம்பவம் நடந்த வீடு

தன்கலா தனக்கு தலை வலிப்பதாக கூறியதாகவும், அதற்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பணிக்கு வருமாறு பண்டாரி கூறியதாக தெரிகிறது. மதிய உணவுக்காக பண்டாரி வீட்டுக்கு சென்றபோது கதவு பூட்டியிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனால், ஜன்னல் கண்ணாடியை கைகளில் உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது மனைவி, குழந்தைகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். பண்டாரி கதறி அழுக, அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம்

மேலும், ஆத்திய பண்டாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/3sQI7ql

Post a Comment

0 Comments