https://ift.tt/7H18oaV News Live Today: ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா... இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று மாலை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று மாலை பாஜக பொதுக்கூட்டம் நடக்கிறது.இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.

பிரதமர் மோடி - அண்ணாமலை

திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சூலூர் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். பின்னர் என் மண் என் மக்கள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில் பள்ளி ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மதுரை தாஜ் ஹோட்டலில் தங்குகிறார். நாளை தூத்துக்குடியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்,



from Vikatan Latest news https://ift.tt/0cX1pWI

Post a Comment

0 Comments