தேனி செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
அவரை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
"வைத்தியலிங்கம் தி.மு.க-வில் இணைந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தமிழ்நாடு வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தி.மு.க-வில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். அதுபற்றி உங்களை அழைத்து கூறுவேன்.
பொறுமையாக இருங்கள். தொடர்ந்து என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன்" என்றார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து வெல்லமண்டி நடராஜனும் காரில் ஏறி புறப்பட்டார்.
from Vikatan Latest news https://ift.tt/tzYKHbQ
0 Comments