https://gumlet.vikatan.com/vikatan/2026-05-17/mzfd2wk1/modismile1200x768.jpg?w=280இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் ஆனைமங்கலம் செப்பேடு; நெதர்லாந்து அரசுக்கு பிரதமர் நன்றி!

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடான இதில், சோழர்களின் பரம்பரை மற்றும் வரலாற்று வெற்றிகள் குறித்த முக்கிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

செப்பேடுகள்
செப்பேடுகள்

இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதைக் குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன.

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணங்கள்...
பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணங்கள்...

இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாசாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.



from Vikatan Latest news https://ift.tt/Dx4aguy

Post a Comment

0 Comments